ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்வாகனங்கள்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -04.10.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 04.10.2026

பரபாவ வருடம் புரட்டாசி 17, ஞாயிற்றுக்கிழமை, October 04, 2026 பஞ்சாங்கம் -திதி : 03:54 AM வரை நவமி பின்னர் தசமி

நட்சத்திரம் : புனர்பூசம் 12:13 AM வரை பிறகு பூசம்

யோகம் : பரீகம் 12:31 PM வரை, அதன் பின் சிவம்

கரணம் : சைதுளை 04:51 PM வரை பிறகு கரசை 03:54 AM வரை பிறகு வனசை

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை

நல்ல நேரம் மாலை: 02.00மணி முதல் 03.00 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை

குளிகை: காலை 03.00 மணி முதல் 04.30 மணி வரை

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

இன்றைய ராசிபலன் -04.10.2026

மேஷம் -எதிர்ப்பு உண்டாகும்

ரிஷபம் -தொழில் வெற்றி

மிதுனம் -கவலை ஏற்படும்

கடகம் -பதட்டம் உண்டாகும்

சிம்மம் -நட்பு கூடும்

கன்னி -தன லாபம் கூடும்

துலாம்-மகிழ்ச்சி பொங்கும்

விருச்சிகம்-தாமதம் உண்டாகும்

தனுசு -ஆரோக்கியத்தில் சுகம்

மகரம் -பணவரவு கூடும்

.கும்பம் -சிக்கல் உண்டாகும்

மீனம் -மன அமைதி

சுப்ரமணிய சிவா பிறந்தநாள்

1884 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் ராஜம் ஐயர் – நாகலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன்.

மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் கல்வி கற்றார். திருவனந்தபுரத்தில் இலவச உணவகத்தில் உண்டு படித்துக் கொண்டே ‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பைத் தொடங்கி இளைஞர்களிடையே தேசபக்தியை ஊட்டினார்.

கொட்டாரக்கரையில் சதானந்த சுவாமிகளைச் சந்தித்த பிறகு, தம் பெயருடன் ‘சிவம்’ என்பதைச் சேர்த்து சுப்பிரமணிய சிவாவானார். காவி உடையணிந்து ‘ஸ்வதந்திரானந்தர்’ என்ற பெயருடன் வாழ்ந்தார்.

மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகிய மூவரும் தமிழகச் சுதந்திரப் போராட்டத்தின் “தேசிய மும்மூர்த்திகள்” என அழைக்கப்பட்டனர்.

வடமொழிச் சொற்கள் கலப்பின்றித் தனித்தமிழில் எழுதும் படைப்பாளிகளுக்குத் தமது ‘ஞானபாநு’ இதழ் வழியாகப் பரிசுகள் வழங்கித் தனித்தமிழ் இயக்கத்தை ஊக்கப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *