செப்டம்பர் 28 முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வு
தாய்க்கும் சேய்க்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ மதுரையில் முதலமைச்சரால் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
தங்க மோதிரத்தில் தமிழ்நாடு அரசின் சின்னம், BIS ஹால்மார்க் முத்திரை மற்றும் தனித்துவமான வரிசை எண் (Unique Serial Number) பொறிக்கப்பட்டு, பாதுகாப்பான பேக்கிங்கில் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் ஜூன் 22, 2026 முதல் பிறந்த குழந்தைகளுக்குப் பொருந்தும் வகையில் (Retrospective Effect) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,குழந்தையின் பெற்றோர் தமிழ்நாட்டின் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருக்க வேண்டும்.தாய் கர்ப்ப காலத்தில் சுகாதாரத் துறையின் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் பதிவு செய்து RCH ID பெற்றிருக்க வேண்டும்.
முந்தைய தேதியில் (ஜூன் 22 முதல்) பிறந்த குழந்தைகளுக்கு: மாநிலம் முழுவதுமுள்ள 107 குறிப்பிட்ட மையங்கள் (Hubs) மூலம் பெற்றோர் தகுந்த ஆவணங்களைக் (RCH ID, பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று) காண்பித்து மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
காவேரி நீர் பங்கீடு வழக்கில் விசாரணை
காவேரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த அளவை விட தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய தண்ணீரில் நிலுவை உள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றம் நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவேரி நீரில் சுமார் 20 TMC வரை பற்றாக்குறை/நிலுவை உள்ளது எனக் கூறி, அதை உடனடியாகத் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக்கோரித் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு (நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலானது), நிலுவை நீர் பற்றாக்குறை குறித்து கர்நாடக அரசின் விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 12, 2026-க்கு ஒத்திவைத்தது.
பகத் சிங் பிறந்த நாள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தீவிரப் புரட்சியாளரும், இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான பகத் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 28, 1907) கடைப்பிடிக்கப்படுகிறது.1919-இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் இவரது மனதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் பெரும் புரட்சித் தீயை மூட்டியது.
நௌஜவான் பாரத் சபா’ (Naujawan Bharat Sabha) அமைப்பை உருவாக்கி இளைஞர்களை ஒருங்கிணைத்தார். பின்னர் சந்திரசேகர் ஆசாத்துடன் இணைந்து ஹிந்துஸ்தான் சோசலிச சோசலிசக் குடியரசு அமைப்பில் (HSRA) தீவிரமாகச் செயல்பட்டார்.
உலக வெறிநாய் கடி விழிப்புணர்வு நாள்
செப்டம்பர் 28 அன்று உலகளவில் வெறிநாய் கடி (Rabies) நோயைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன

