இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -11.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 11.10.2026
பரபாவ வருடம் ஆவணி 25, வெள்ளிக்கிழமை, September 11, 2026 பஞ்சாங்கம் –
திதி : 08:56 AM வரை அமாவாசை பின்னர் பிரதமை
நட்சத்திரம் : பூரம் 01:16 PM வரை பிறகு உத்திரம்
யோகம் : ஸாத்தியம் 05:01 PM வரை, அதன் பின் சுபம்
கரணம் : நாகவம் 08:57 AM வரை பிறகு கிமிஸ்துக்கினம் 08:18 PM வரை பிறகு பவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
இன்றைய ராசிபலன் (11.09.2026)
மேஷம் -தெளிவு பிறக்கும்
ரிஷபம் -விவேகம் கூடும்
மிதுனம் -சிக்கல் உண்டாகும்
கடகம் -பெருமை சேரும்
சிம்மம் – மன நிறைவு
கன்னி -பொறுமை அவசியம்
துலாம்- களிப்பு உண்டாகும்
விருச்சிகம்-புகழ் கிடைக்கும்
தனுசு -தொழில் விருத்தி
மகரம் -செலவு உண்டாகும்
கும்பம் -வெற்றி நிச்சயம்
மீனம் -ஆக்கம் அதிகரிக்கும்
மகாகவி நினைவு நாள்
தமிழ்நாடு அரசு பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது நினைவு நாளை ஆண்டுதோறும் ‘மகாகவி நாள்’ ஆகக் கடைப்பிடித்து வருகிறது.
பிறப்பு: 11 டிசம்பர் 1882 (எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்).பெற்றோர்: சின்னசாமி அய்யர் – இலக்குமி அம்மாள்.இயற்பெயர்: சுப்பிரமணியன் (செல்லமாக ‘சுப்பையா’).’பாரதி’ பட்டம்: இவரது கவிப்புலமையைப் பாராட்டி எட்டயபுர சமஸ்தான மன்னரால் 11-ஆம் வயதில் வழங்கப்பட்டது.
பெண்கல்வி, பெண் விடுதலை மற்றும் சாதி மறுப்புக்காகத் தீவிரமாகப் போராடியவர்.”சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற கொள்கையைக் கவிதைகள் மூலம் பரப்பியவர்.

