ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -10.09.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 10.09.2026

பரபாவ வருடம் ஆவணி 24, வியாழக்கிழமை, September 10, 2026 பஞ்சாங்கம் –

திதி : 10:33 AM வரை சதுர்தசி பின்னர் அமாவாசை

நட்சத்திரம் : மகம் 02:04 PM வரை பிறகு பூரம்

யோகம் : ஸித்தம் 07:17 PM வரை, அதன் பின் ஸாத்தியம்

கரணம் : சகுனி 10:33 AM வரை பிறகு சதுஷ்பாதம் 09:42 PM வரை பிறகு நாகவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 12. 15மணி முதல் 01.15 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை

எமகண்டம் : காலை 06.00 முதல் 07.30 மணி வரை

குளிகை: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

இன்றைய ராசிபலன் (10.09.2026)

மேஷம் -சாதனை உண்டாகும்

ரிஷபம் -ஆரோக்கியத்தில் நலம்

மிதுனம் -மன நிறைவு

கடகம் -நன்மை பெருகும்

சிம்மம் – நற்செயல் உண்டாகும்

கன்னி -மேன்மை உண்டாகும்

துலாம்-தொழில் உயர்வு

விருச்சிகம்-ஆரோக்கியம் தேறும்

தனுசு -உற்சாகம் பிறக்கும்

மகரம் -குடும்பத்தில் நலம்

கும்பம் -குழப்பம் உண்டாகும்

மீனம் -சாந்தம் உண்டாகும்

இன்றைய நாளின் சிறப்பு

ஆவணி மாத அம்மாவாசை நாளாகும்,வியாழக்கிழமை சூரிய உதயத்தின் போது அமாவாசை திதி இருப்பதால், அன்றைய தினமே முன்னோர்களுக்கான பித்ரு தர்ப்பணம் மற்றும் வழிபாடுகளைச் செய்ய வேண்டும்.

காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணிக்குள்ளான உச்சி காலத்தில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. ஆற்றங்கரை, கடற்கரை அல்லது வீட்டிலேயே எளிய முறையில் இதனைச் செய்யலாம்.

சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைக்க வேண்டும். காக்கைக்கு உணவு அளித்த பிறகே குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட வேண்டும்.

தலைமுடி வெட்டுவது, நகம் வெட்டுவது மற்றும் சுப காரியங்கள் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *