நீட் வேண்டாம் -நீலம் மாணவர் அமைப்பின் முதல் போராட்டம் -7 வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
credits -google

நீட் தேர்வு ரத்து செய்ய கூறி பல வருடங்களாகவே போராடி கொண்டே இருக்கிறோம், ஆனால் முன்னேப்போதும் இல்லாத வகையில் தற்போது சூழ்நிலை வகையில் மாணவர்களிடயே உத்வேகத்தை பெற்றுள்ளது, கடந்த ஜூலை மாதம் டெல்லி போராட்டமானது மாணவர்களின் மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைத்துள்ளது
அரசியல் நடவடிக்கைகளை நக்கல் நையாண்டி செய்வதற்காக உருவாக்க பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்காக ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டத்தில் வெற்றி பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது
தமிழ்நாட்டிலும் அதே போல் நீட் தேர்வை ரத்து செய்ய கூறி போராட்டம் நடத்தினர்,இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகவும், சிஜேபி இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் அமைப்பின் தலைமையில் தமிழ்த் திரைக் கலைஞர்கள் இன்று (ஜூலை 23) மாலை போராட்டம் நடத்தினர்
இந்தப் போராட்டத்தில், முன்னணி இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வர்ன், பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர்கள் ஆண்ட்ரியா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்
இதில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன் “நாம் போராடும் போராட்டம் வெறும் நியாயமான நீட் தேர்விற்காக மட்டுமில்லை, நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் “என்று பேசியுள்ளார்,
மருத்துவராக வேண்டும், மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதெல்லாம் கண்டிப்பாக ஒவ்வொரு தனி நபரின் சிறுவயது ஆசையாக இருக்கும், ஆனால் அதற்காகவே மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் seluthuvaபிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற, பாடங்களை ஆழமாகப் புரிந்து படிக்கக்கூடிய திறமையான மாணவர்களால் கூட முதல் முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இரண்டாவது முறை எழுதியும், அவர்களது பெற்றோரால் கட்டணம் செலுத்தக்கூடிய வகையிலான மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழலே நிலவுகிறது
அடிப்படை கல்வியிலேயே பிரச்சனை இருக்கும்போழுது, ஒரே மாதிரியான கல்வி இல்லாதபோது எப்படி இந்தியாவில் மருத்துவ படிப்பிற்காக நாடு முழுவதும் ஒரே நீட் தேர்வு சரியாக இருக்கும்?? என கேள்வி எழுப்பி உள்ளனர்
மருத்துவ கல்வியை மாநில பட்டியலுக்குள் மாற்றிட வேண்டும் என்ற கோரிக்கையயை வலியுறுத்தி காலவரையின்றி 7 வது நாளாக அமைதியான முறையில் பட்டினி போராட்டத்தில் ஜீவா,தனசேகர்,புளியன்தோப்பு மோகன் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தியக் குடியரசு தலைவர் செ. கு. தமிழரசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்

