இன்றைய ஓரை நேரம் காலம் பார்போமா
இன்றைய அதிவேக காலகட்டத்தில் மக்கள் நல்ல நேரம் காலம் ஆகியவற்றை பார்த்து செயல்களை செய்கின்றனர். நல்ல நேரம் காலம் எவ்வளவு முக்கியமோ அதுபோல ஓரை பார்த்து செய்யும் செயலும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒருவர் தான் தொடங்கும் புதிய முயற்சி சுப நிகழ்ச்சிகள் மற்றும் வேலைக்கான கொடுக்கல் வாங்கல் ஆகிய செயல்கள் செய்யும்போது சில சமிக்கைகள் நமக்கு பெரு உதவிகரமாக இருக்கும் அவை வரப்போவதை நமக்கு சுட்டிக்காட்டும் இது முன்னோர்கள் பயன்படுத்திய யுக்தி. அதுபோன்று ஓரையும் முன்னோர்கள் வகுத்தது ஓரை பார்த்து செய்யும் செயலானது வெற்றியைத் தரும்.
ராசிக்குரிய ஓரை
ஊரை அட்டவணை தினசரி பார்த்து வைத்து அதன்படி நமது முக்கிய வேலைகள், பரிமாற்றங்கள், புதிய தொடக்கங்கள் ஆகியவற்றை செய்ய தொடங்கலாம். மேலும் நமக்கு நமது ராசி படி நமக்கான ஹோரைகள் நேரங்கள் அமையும் போது அது மேலும் சிறப்பை தரும். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் உரிய ஓரை நேரம் மற்றும் ராசிகளுக்கு பயன் தராதஓரை நேரம் அதனை பயன்படுத்தி தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.
| ராசி | அதிபதி | மிகவும் நல்ல ஹோரை | தவிர்க்க வேண்டிய ஹோரை (பொதுவாக) |
| மேஷம் | செவ்வாய் | செவ்வாய், சூரியன், குரு | சனி |
| ரிஷபம் | சுக்கிரன் | சுக்கிரன், புதன், சந்திரன் | செவ்வாய் |
| மிதுனம் | புதன் | புதன், சுக்கிரன் | சந்திரன் (சில நேரங்களில்) |
| கடகம் | சந்திரன் | சந்திரன், குரு, சுக்கிரன் | சனி |
| சிம்மம் | சூரியன் | சூரியன், குரு, செவ்வாய் | சனி |
| கன்னி | புதன் | புதன், சுக்கிரன் | செவ்வாய் |
| துலாம் | சுக்கிரன் | சுக்கிரன், புதன், சனி | சூரியன் |
| விருச்சிகம் | செவ்வாய் | செவ்வாய், குரு, சூரியன் | சனி |
| தனுசு | குரு | குரு, சூரியன், சந்திரன் | சுக்கிரன் (சில செயல்களுக்கு) |
| மகரம் | சனி | சனி, புதன், சுக்கிரன் | செவ்வாய் |
| கும்பம் | சனி | சனி, புதன், சுக்கிரன் | செவ்வாய் |
| மீனம் | குரு | குரு, சந்திரன், சுக்கிரன் | சனி |
மேலும் படிக்க : ஓரை நேரம் ராசிகளுக்கான ஓரை பலன்
ஓரை அட்டவணை
தினசரி நாம் தொடங்கும் நாட்கள் சூரிய உதய நேரத்தில் ஓரை நேரம் இருக்கும் நமக்கான ஒரே நேரம் எவ்வளவு முக்கியமோ அதுபோல தினசரி தான் செய்யும் செயல்களுக்கு ஓரை பார்த்து சுப நிகழ்ச்சிகள் செய்வது வேலை தொடக்கம் புது தொழில் தொடக்கம் வளைகாப்பு சீர் மற்றும் கொடுக்கல் வாங்கல் வீடு கட்டுதல் வீடு கட்டுவதற்கான கட்டிட வேலை தொடக்கம் போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஓரை நேரம் பார்த்து செய்யும்போது அது நமக்கு சாதகமாக அமையும் அத்தகைய ஓரை நேரம் அட்டவணை கொடுத்துள்ளோம் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் படி செயல்பட்டு வெற்றியைப் பெற வாழ்த்துக்கள்

