நவகிரக மந்திரங்கள் மற்றும் தமிழ் மந்திரங்கள்
நமது அன்றாட வாழ்வில் கோள்கள் முக்கிய பங்கு வைக்கின்றன சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை நம்மை சுற்றி கோள்களின் ஆட்சியை நடக்கின்றது கோள்கள் நமக்கு சாதகமாக இருக்கவும் கோவிலின் அருள் பெற்று வளமுடன் வாழ நான் எச்சரிக்க வேண்டிய நவக்கிரக மந்திரங்கள் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது அதனை தினசரி படித்து நமது பூஜை நேரங்களில் கோள்களின் அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்
சூரியன்: ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ
சந்திரன்: ஓம் ச்ராம் ச்ரீம் ச்ரௌம் சஹ சந்திராய நமஹ
செவ்வாய்: ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் சஹ பௌமாய நமஹ
புதன்: ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ
குரு: ஓம் கிராம் க்ரீம் கிரௌம் சஹ குரவே நமஹ
சுக்கிரன்: ஓம் ச்ராம் ச்ரீம் ச்ரௌம் சஹ சுக்ராய நமஹ
சனி: ஓம் ச்ராம் ச்ரீம் ச்ரௌம் சஹ சனைஸ்ச்சராய நமஹ
ராகு: ஓம் ராம் ராகவே நமஹ
கேது: ஓம் கேம் கேதவே நமஹ

சூரிய பகவான்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
சந்திர பகவான்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் போற்றி
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி
செவ்வாய் பகவான்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு
புதன் பகவான்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி
குரு பகவான்
குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப்பர குருநேசா க்ரஹ
தோஷமின்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி
சுக்கிர பகவான்
சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே
சனீஸ்வர பகவான்
சங்கடந் தீரப்பாய் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா
ராகு பகவான்
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியோ ரம்மியா போற்றி
கேது பகவான்
கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீரப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி
