தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து சென்னையில் இரண்டு நாள் IAS IPS மாநாடு நடத்தும் முதலமைச்சர்
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து சென்னையில் ஜூன் 29 மற்றும் ஜூன் 30-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் ஐஏஎஸ் , ஐ எஃப் எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் உயர் மட்ட மாநாடு நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றுவருகிறது,
இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்
மாநாட்டில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்களளை தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சியர்கள் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தீவிரமாக பராமரிக்க வேண்டும்,குற்றச் சம்பவங்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்
தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் தாமதம் இன்றி மக்களுக்கு சென்றடைவதை விருத்தி செய்ய வேண்டும்
முதியோர் நலன், சட்ட விரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பது, அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலம் பற்றி என் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன
இந்தத் தனிப்பட்ட கூட்டத்தில், அரசின் 28 துறைகளில் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது

