electionNEWNewsவாழ்வியல்

Tvk கட்சியானது 118 இட பெரும்பான்மை பெறவில்லை என்றால் என்ன ஆகும்?? Relection நடக்குமா??

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி ஒரு வலுவான அறிமுகத்தை அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, TVK குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்து, பாரம்பரிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவிற்கே சவால் விடுத்துள்ளது, இந்த தேர்தலில் 108 இடங்களில்,வெற்றி பெற்று அதிரடியான வெற்றியைக் கொண்டுள்ளது, இருப்பினும் முதலமைச்சர் பதவிக்கு 118 தொகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது, தற்போது டிவி கே கட்சி ஆனது மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து,118 இடப் பெரும்பான்மையை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்

credit – google

118 இடபெரும்பான்மை கட்டாயம்! இல்லையென்றால்??

தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 234 உள்ளன, முதலமைச்சர் பதவி வகிக்க அந்த கட்சையானது கண்டிப்பாக 118 இடப் பெரும்பான்மையை கட்டாயம், கை பற்றி இருக்க வேண்டும், தற்போது டி வி கே கட்சியானது 108 தொகுதிகளில் முன்னிலை வகுத்துள்ளது இருப்பினும், பத்து இடங்கள் தேவைப்படும் படுகின்றன, தற்போதைய நிலையை” தொங்கு சட்டசபை” எனவும் அழைக்கப்படும்

சுமூகமான கட்சிபேச்சுவார்த்தை

பெரும்பான்மை இல்லாத மற்ற சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவு பெரும்பான்மையை உறுதி செய்ய வேண்டும்

தேர்தலுக்குப் பிறகு பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து 118 இடப் பெரும்பான்மையை எட்ட முயற்சிக்கலாம்

ஆளுநரின் அழைப்பு

பொதுவாக சட்டசபையில் அதிக இடம்பெரும்பான்மை அளித்த கட்சி தலைவரை ஆட்சி அமைக்க, ஆளுநர் அழைப்பார்

அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் 118 இட பெரும்பான்மையை தக்க வைத்து சட்டசபையில் நிரூபிக்க வேண்டும்

நம்பிக்கை வாக்கெடுப்பு

ஆளுநர் அழைப்பிற்குப் பிறகு சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தி 118 தொகுதிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

இவ்வாறு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால், தோல்வியுற்று அரசு கவிலும்

குடியரசுத் தலைவரின் ஆட்சி அமையும்

எந்த ஒரு கட்சியாலும் அல்லது கூட்டணியினாலும் பெரும்பான்மையான இடத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில், ஆளுநரின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரின் ஆட்சி அமையும்

மறு தேர்தல்

அரசியல் மட்டுக்கட்டை நீடித்தால் மற்றும் நிலையான ஆட்சி அமைத்து வாய்ப்பில்லை என்றால், சட்டமன்றம் கலைக்கப்பட்டு மறு தேர்தல் Fresh election நடத்துப்படும்

எதிர்க்கட்சியாக வாய்ப்புண்டு

ஒருவேளை TVk கட்சியானது குறைந்த இடங்களை மட்டுமே பெற்று, மற்ற கட்சிகள் அதிமுக மற்றும் திமுகவின் கூட்டணியால் பெரும்பான்மையான இடத்தை பெற்றுவிட்டால், விஜய் அவர்கள் ஒரு வலிமையான சட்டசபை எதிர்க்கட்சியாக செயல்பட முடியும், இது தாவிகா கட்சிக்கு வளர்ச்சியின் அடித்தளமாக அமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *