தளபதி விஜய் படத்தின் அப்டேட்( பீஸ்ட்)

நடிகர் தளபதி விஜய் படத்தில் எந்த அப்டேட் வெளியானாலும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகிவிடும். பல சாதனைகளில் தளபதியின் படம் முதலிடம் பிடித்து கல்லா கட்டிவிடும். தளபதியின் ரசிகர்கள் எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருப்பாங்க. நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான,கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தளபதியின் புதிய திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட்க்கு ரசிகர்கள் காத்துக்கிட்டு இருக்காங்க. பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். பீஸ்ட் திரை படம் ஆக்சன் படமாகும்.
பீஸ்ட் திரைப்படத்தின் நடிகர் குழு.
பூஜா ஹேக்டி.
செல்வராகவன், யோகி பாபு, சதீஷ் கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். செல்வராகவன் இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சன் பிக்சர் நிறுவனம் இத் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

படப்பிடிப்பின் துவக்கம்
ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது அங்கு ஒரு அறிமுகப் பாடல் மற்றும் அதிரடி காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது .
மேலும் படிக்க : அறிவா ஆண்டவனை வழிபட மூக்குத்தி அம்மன் அறிவுரை

தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அதிகாரக் குழு அறிவிப்போடு ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க : ஆஸ்கர் விருது:- சூர்யா ரசிகர்கள் ஏமாற்றம்..?
பீஸ்ட் திரைப்படத்தின் இசையமைப்பாளர்
இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில்
ஒரு பாடல் தளபதி விஜய் பாடியதாகவும் சிவகார்த்திகேயன் பாடலை எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.