electionPost

பெரம்பூர் தொகுதியில் அதிரடியாக வெற்றி பெற்ற விஜய் – வெற்றியை அடித்து தூக்கிய தவெக வினர் – வரலாறு காணாத வெற்றி கண்ட தனிக்கட்சி

2026 சட்டமன்ற தேர்தல் தவெக கட்சி தலைவர் விஜய் அரசியல் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்,மே 4 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, பெரம்பூர் தொகுதியில் வெற்றி கண்டுள்ளார், குறுகிய காலத்திலேயே மக்கள் இயக்கத்தை அரசியலாக மாற்றி, அரசியல் களத்தில் களம் கண்டு,வெற்றி காண்பது ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது

Credits – google

tvk கட்சியின் ஆரம்பம்

நடிகர் விஜய் தனது “விஜய் மக்கள் இயக்கம்” மூலம் பல ஆண்டுகளாக சமூக சேவைகளை செய்தார், நீண்டகால எதிர்பார்ப்பிற்கு பிறகு கமிழக வெற்றி கழகம் பிப்ரவரி 02, 2024 2024 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது,

  • தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை : “பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் ” என்ற சமத்துவத்தை கொள்கையை கொண்டுள்ளது, சமூக நீதி, மதசார்பின்மை மற்றும் தமிழ் உணர்வு போன்றவை முன் நிறுத்துகிறது
  • கொடியில் இரண்டு யானைகளும் நடுவில் வாகை மலரும் இடம் பெற்றுள்ள

தமிழக வெற்றி கழகத்தின் மிக முக்கிய நிகழ்வு

  • அக்டோபர் 24 2024 விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விஜயின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக பதிவு செய்ய வைத்தது,
  • இதில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கலந்து கொண்டனர்
  • விஜய் இந்த கூட்டத்தில் திராவிட மாடலையும், தேசியம் இரண்டையும் விமர்சித்து ஒரு மாற்று அரசியலின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்

வரலாறு காணாத வெற்றி கண்ட தனிக்கட்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி தவெக – 100, திமுக – 70, அதிமுக – 64 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 117 தொகுதிகள் பெரும்பான்மை தேவை என்பது குறிப்பிடத்தக்கது,மே 4 சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, பெரம்பூர் தொகுதியில் வெற்றி கண்டுள்ளார் சுமார் 41000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்

மகன் வெற்றிக்கு பெருமிதம் அடையும் தந்தை

கடந்த 30 ஆண்டுகளாகவே தமிழ் சமூகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விஜய் நினைத்துக்கொண்டிருந்தார். அந்த எண்ணம் அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அதனாலே படிப்படியாக அவர் இத்தகைய முன்னெடுப்புகளை செயல்படுத்தி வந்தார். இன்று அவர் தமிழ்நாட்டில் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் என தவெக கட்சி தலைவர் விஜய் அவரின் தந்தை சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்

மாற்று அரசியல் ஏற்படுத்தும் தவெக

தமிழக மக்கள் விஜயை தலைவராக பார்க்கவில்லை,குடும்பத்தில் உள்ள உறுப்பினராக பார்க்கின்றனர், நம்பிக்கை வைத்துள்ளனர்,அவர் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது, அவரது வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டப்பட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *