TOP STORIESசெய்திகள்தமிழகம்

சட்ட சபையில் தெறிக்க விட்ட விஜய் -எதிர்க்கட்சி தலைவருக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய் – காரசாரமாக நடைபெற்ற சட்டமன்றம்

ஜூன் 18 நடந்த சட்டப்பேரவைக்கு வாயைத் திறங்க சிஎம் என்ற பேச்சை அணிந்து கொண்டு வந்த திமுகவினருக்கு இன்று தக்க பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது இருந்தாலும் முதலமைச்சர் எதற்கும் வாய் திறந்து பேசவே இல்லை, அவருடைய செயல்பாடுகளும் அமைதியாகவே இருக்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏக்கள் என பலரும் விமர்சித்து வந்தனர், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியை விமர்சித்தும் நக்கலடித்தும் அடித்தும் தக்க பதிலடி கொடுத்துள்ளார் அது தற்போது இணையதளத்தில் வைரலாகவும் பரவிக் கொண்டிருக்கிறது

credits -google

எங்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது தான்

புதிதாக பதவியேற்றுள்ள தாவீகா அரசிற்கு உங்களைப் போல் ஆட்சி செய்ய தெரியாது தான் எனக்கூறி திமுகவினரின் ஆட்சியில் நடந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்

மக்கள் பணியில் செய்ய தெரிந்த எங்களுக்கு மக்களின் பணத்தை சுருட்ட தெரியவில்லை

டென்டர்களை முறைப்படுத்த தெரிந்த எங்களுக்கு அதன் விலையை உயர்த்தி ஊழல் செய்ய தெரியவில்லை தான்

பணி உயர்வு வழங்கவும்,பணியிடை மாற்றம் கலந்தாய்வு செய்யவும் தெரியுமே தவிர,அதற்காக அவர்களிடம் பணம் பறிக்க தெரியாது

புது பணியிடங்களை நிரப்ப தெரியும் ஆனால் பணியிடங்களை விற்க தெரியாது,கோவில்களில் நடைபெறும் சீர்க்கேட்டை தடுக்க தெரியுமே தவிர, கோவில் பணத்தை கொள்ளையடிக்கவும் தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது

கனிம வளங்களை பாதுகாக்க தெரியுமே தவிர அந்த கனிமங்களை விட்டு காசாக தெரியாது

நமது குடும்பத்தில் உள்ள அக்கா தங்கை பாட்டி போன்ற மதிக்கத்தக்க பெண்களை மதிக்க தெரியுமே தவிர ஆயிரம் ரூபாய்க்கு கேசு ஓசி பஸ் என எல்லாம் இழிவாக பேசத் தெரியாது என சட்டபேரவையில் பேசியுள்ளார்,

மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்குக் காவல்துறையைக் கையில் வைத்திருந்த முந்தைய அரசே காரணம் என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

credits -google

குட்டி ஸ்டோரி -அப்பாவை காணோம்?

முதலமைச்சர் விஜய், ஒரு குட்டிக்கதையை கூறி எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். வெயிலில் நின்று எதையோ தேடிக்கொண்டிருந்த வயதான ஒருவரிடம் சிறுவன் ஒருவர், “என்ன தேடுகிறீர்கள்?” எனக் கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் “உன் அப்பாவைத் தேடுகிறேன்” என பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்

இது போல் தான் திமுக கட்சியினர் கட்சிக்கு சம்பந்தமே இல்லாத “சோபா மாடல் ஆட்சி ” புஷ்பா பட ஆட்சி “ரீல்ஸ் ஆட்சி என்றெல்லாம் சம்பந்தம் இல்லாமல் பேசிகொண்டிருக்கிறார்கள்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *