ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சுப காரியங்களுக்கு பொருந்தாதாது சனி ஹோரை -எதிலும் கவனம் வேண்டும்

ஜோதிட சாஸ்திரத்தில் ” ஓரை “என்பது ஒரு நாளின் நேரத்தை கிரகங்களின் அதிக்கத்திற்கு ஏற்ப பிரிக்கும் முறையாகும், அன்றாட வாழ்க்கையில் ஏழு நாட்கள் உள்ளன அதே போல் ஏழு கிரங்கங்களும் உள்ளன,ஒவ்வொரு ஹோரையும் தோராயமாக ஒரு மணி நேரம் நீடிக்கும். ஒரு செயலை அல்லது நல்ல காரியத்தை தொடங்கும் முன் அதற்குரிய கிரகத்தின் ஹோரை தெரிந்து கொண்டு எந்த நேரத்தில் தொடங்குவது மற்றும் அந்த ஹோரை நேரத்தில் செயல்பட்டால் என்ன நற்பலன்களைத் தரும் என்பது பார்க்க வேண்டும்,சூரிய உதயத்தில் இருந்து தொடங்கும் முதல் ஹோரை, அந்தந்த கிழமையின் அதிபதியாக இருக்கும்.அதன் படி சனிக்கிழமையில் சனி ஹோரை அதிபதியாக இருக்கிறது, இந்த சனி ஹோரையில் என்ன செயல்கள் செய்யலாம், எந்த செயல்களை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்

சனி ஹோரையில் எந்த செயல் செய்யலாம்

புதிய தொழிலாளர் நியமனம், உழைப்பு சார்ந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்களில் கையெழுத்திடலாம், இரும்புப்பொருள் வாங்க, மின்சாதனம் தொடர்பான வேலைகளுக்கு சிறந்தது

பழைய மற்றும் புதிய வீடு, நிலம் வாங்குவது அல்லது குத்தகைக்கு விடுவது தொடர்பான சொத்து நடவடிக்கை விஷயங்களைப் பேசலாம்

வாங்கிய கடன் திருப்பி கொடுப்பதற்கும்,பழைய கடனை அடைப்பதற்கும் முயற்சிகள் எடுக்கலாம் இந்த ஹோரையில் கடன் அடைக்கும் பொழுது, திரும்ப கடன் பெரும் சூழல் ஏற்படாது

சனி ஹோரையில் செய்ய கூடாதாவை

பொதுவாக சனி ஹோரை சுப காரியங்களுக்கு பொருந்தாது, சனி ஹோரையில் ஆடை அணிகலன் வாங்குவது,புதிய தொழில் தொடங்குவது கூடாது

சனிஹோரையில் தொலைந்த பணமோ பொருளோ திரும்ப கிடைக்காது, இந்த ஹோரையில் பணம் பொருளை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்

பொதுவாக ஹோரை அறிந்து செயல்படுபவர்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி காணலாம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *