கூகுளின் லைப்ஸ்டைல் மற்றும் அதன் சிறப்புகள்!
கூகுள் வழங்கும் பாதுகாப்பு தகவல் மையம் நாம் எப்படி கூகுளை பயன்படுத்த வேண்டும் என்ன தகவல்களை எங்க பெற முடியும் உள்ளிட்ட தகவல்களை தமிழ் மொழியிலேயே நமக்கு விளக்கி கொடுத்துள்ளது.
கூகுளின் பாதுகாப்பு மையம் எல்லாருக்குமானது எங்கும் எளிதாக பயன்படுத்தலாம். நீங்கள் எங்கும் தங்கு தடையின்றி பாதுகாப்பாக உலா வரவும் உங்களுக்கு தேவையான தகவல்களை சர்ச் பாக்ஸில் பெறலாம். உங்கள் தேடுபொறிகளின் வார்த்தைகான அனைத்து உள்ளடக்கங்களை இது கொண்டிருக்கும். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருந்து இன்று உலக மொழிகளில் உலா வருகின்றது கூகுள்.
கூகுளின் பாதுகாப்பு எந்த வயதினரும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இருக்கும், மேலும் தெளிவாக தமிழ் மொழியிலுக் விளக்க பட்டிருக்கும்.
ஜிமமெயில் கணக்கு:
தனிமனிதர்கள் பயன்பாட்டிற்கு தனியாக சொந்த கணக்கினை தொடங்கலாம்.
கூகுளில் உங்களுக்கான கணக்கு நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியினை கொடுக்கின்றது கூகுள்.
கூகுள் கணக்குகளில் நீங்கள் எளிதாக உள்ளே நுழையலாம் அத்துடன் உங்களுக்கு தேவையானவற்றை அவற்றில் சேமிக்க உங்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ள டிரைவ்களில் 15 ஜிபிகள் எந்த வித கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம். அவற்றில் உங்களுக்கு தேவையான டாக்குமெண்ட்கள் ஆபிஸ் தகவல்கள் சேமிக்கலாம். இதனை உபயோக்கிக்கும் பொழுது ஆன்லைனில் ஆட்டோ மெட்டிக் சேவ் செய்யும் தன்மையுடையது.
அலுவலக குறிப்புகள் மற்றும் குழு குறிப்புகள், ரிப்போர்ட்கள் அனைதையும் கூகுள் சீட்டினை பயன்படுத்தலாம். இது எக்செல்சீட் போல் இருக்கும். கூகுளில் மைக்ரோசாப்ட்வோர்டு, எக்செல்சீட் இவையெல்லாம் அடிசனாலாக ஆட்டோமெட்டிக்காக இருக்கும்.
ஆன்லைனில் இதனை டிரைவ் மூலம் பயன்படுத்தலாம். சீட், கூகுள் டாக்குமெண்ட்கள் குழுவாகப் பயன்படுத்தி அதனை ஒருக்கொருவர் எளிதாக பரிமாறிக் கொள்ள முடியும்.
மேலும் கூகுள் டிரைவ் ஒரு தனி கணினி போல் போல்டர்களை உருவாக்கி பராமரிக்க உதவுகுகின்றது.
ஜிமெயில் அமைப்புகள்:
நீங்கள் விரும்பினால் தவிர உங்கள் மின்னஞ்சலானது வேறு யாராலும் உபயோகிக்க முடியாது. ஜுமெயில் உங்களுக்கான பர்சனல் டைரியாக இருக்கும் இவற்றில் நீங்கள் உங்கள் தரவுகளை முறையாக சேமிக்கலாம்.
ஜிமெயில் இன்று பலரின் வாழ்க்கை முகவரியாக உள்ளது.
ஒரு கணக்குடன் இணைத்து நீங்கள் சுய கணக்கு மற்றும் மற்ற கணக்குகளையும் தொடங்கலாம். ஆபிஸ் தேவை மற்றும் பர்சனல் ஆக்கவுண்ட்கள் என விரிந்து உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.
கூகுள் அக்கவுண்டுகளை நீங்கள் மொபைலிலும், டெஸ்க் டாப் மற்றும் டேப்களிலும் பயன்படுத்தலாம். கடவுச் செல்லினை திருத்தி அமைத்தல் போன்ற செயல்களில் பாதுகாப்பாக நமக்கு மீட்டித் தருகின்றது. பாஸ்வோர்டை திரும்ப பெற நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் எண் மூலம் உங்களுக்கான டோக்கன் போன்ற பாதுகாப்பு எண்களை கொடுத்து பாஸ்வோர்ட் திரும்பி அமைக்க உதவுகின்றது.
கூகுளில் கணக்கு மொபைல் நம்பர் பயன்படுத்தும் பொழுது அது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் மேலும் அது உங்களுக்கு தெரியாமல் உள்ளோர் நுழைந்து உங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்த நினைத்தால் அவர்களிடம் கணக்கிற்குச் செல்ல் மொபைலில் சரிபார்பு எண்கள் கேட்கும் இதனால் உங்கள் கணக்கை முறைகேடாக பயன்படுத்துவோர்க்கும் சிக்கல் உண்டாகும் மேலும் உங்களுக்கும் தகவல்கள் வரும். ஆகவே யாராலும் எளிதாக உங்கள் கணக்கை முறைகேடாக பயன்படுத்த முடியாது என்ற உத்திரவாதத்தைனை கூகுள் நமக்கு உணர்த்துக்கின்றது.
கூகுளினை தகவல்களின் சுரங்கம் எனலாம் அதனை பயன்படுத்தி இன்றைய உலகமே இயங்குகின்றது. அத்தகைய பெருமை மிக்க கூகுளின் முதன்மை செயலராக தற்பொழுது இயங்குபவர் சுந்தர் பிச்சை ஆவார். கூகுளின் துணை அங்கங்களாக விளங்கும் யூடியூப்கள் தற்பொழுதைய நவீன கானொளியாக இயங்குகின்றது எனலாம். அதன் இயங்கு தளமான கூகுள் குரோம் சிறப்பு வாய்ந்த பிரவுசர்களாக இயங்குகின்றன.
கூகுளில் உள்ள கூகுள் பிளஸ் சமூக வலைதளங்களை போல் இதுவும் சிறப்பு வாய்ந்த குழுவாக இயங்கிவருகின்றது. இன்னும் பல சுவாரசியங்கள் நிறைந்த கூகுளை பற்றி அடுத்து அறிவோம்.