கூகுள் டூடுலில் நடனமாடும் இந்திய பெண்மணி
இன்று கூகுளை திறந்தால் பாட்டி நடனமாடுகிறாரே! யார் இவர்? அதை கிளிக் பண்ணியே பார்த்துடுவோம். ஆஹா பெரிய வரலாறு பெண்மணியாய் இருக்காங்களே! முழுசா படிக்க ஒரு நாள் போதாது போல இருக்கே!
ஜோஹ்ரா மும்தாஜ் சேகல்
பாரதத்தின் சுதந்திரத்திற்கு முன்பு 1912 தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார். இவருக்கும் இன்றைய தினத்திற்கும் என்ன சம்பந்தம்!
ஜோஹ்ரா சேகல் நாட்டியம்
பட்டப்படிப்பை முடித்தவருக்கு உறவினரால் பிரிட்டிஷ் நடிகரிடம் பயில வாய்ப்பு கிடைத்து, இந்தியாவிலிருந்து எடின்பர்க் பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டவரின் நடனமான பேலட் நடனத்தை பயின்றார். உதய் சங்கரால் இவரின் வாழ்க்கை பயணம் நடனத்தில் இருந்து திரையுலகிற்கு மாறியது.
திரையுலக தொடக்கம்
பாரதம் சுதந்திரத்திற்கு முன்பே 1943 திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியவர் ஜோஹ்ரா சேகல். 1946 நீச்சா பஜார் என்னும் இந்தி திரைப்படத்தில் தன் நடிப்பைத் தொடர்ந்தார். சிறந்த திரைப்படமாக வெளிநாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டது.
சிறந்த படம்
கிராண்ட் பிரிக்ஸ் டு ஃபெஸ்டிவல், இன்டர்நேஷனல் டு ஃபிலிம் என்ற இரண்டிலும் சிறந்த திரைப்படத்துக்கான விருதை நீச்சா பஜார் பெற்றதற்கு பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் அங்கீகாரம் பெற்றது. இதுவே கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக அங்கீகரிக்கப்பட்ட இந்திய திரைப்படம்.
இன்றைய சிறப்பு
1946ல் செப்டம்பர் 29 அன்று தான் நீச்சா பஜார் திரைப்படம் வெளியானது. ஜோஹ்ரா சேகல் நடித்த படம் வெளிநாட்டளவில் சிறப்பாக அமைந்ததால் இவரை சிறப்பிக்கும் வகையில் இந்த நாள் இவரை நினைவூட்டுகிறது.
ஹாலிவுட்
பாலிவுட் என்று சொல்லப்படும் ஹிந்தி திரையுலகில் பல படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஹாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். தி இந்தியன் டேல்ஸ் ஆஃப் ருட்யார்ட் கிப்ளிங், டாக்டர் ஊ போன்ற தொடர்களில் இவரின் நடிப்பு குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
இந்தியப் பெண்மணியான இவர் நாடகக் கலைஞராக நடிகராக நடன இயக்குனராகவும் சிறந்த விளங்கிய ஜோஹ்ரா சேகலை இந்திய அரசாங்கம் சிறப்பித்துள்ளது. சோஜ்ரா சேகல் பத்மஸ்ரீ பத்மபூஷன் பத்மவிபூஷன் காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகளின் சொந்தக்காரர்.
சரித்திரம்
ஜோஹ்ரா சேகலுக்கு 1942 காமேஸ்வர் சேகலுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கிரண் சேகல் மற்றும் பவன் சேகல் என்னும் இரு குழந்தைகள். கிரண் சேகல் ஜோஹ்ரா சேகலின் சரித்திரத்தை புத்தகமாக 2012ல் வெளியிட்டுள்ளார்.
காலம்
27 ஏப்ரல் 1912 – 10 ஜூலை 2014. 102 வருடங்கள் வாழ்ந்து மாபெரும் சகாப்தம் படைத்த இந்திய பெண்மணி. நிமோனியாவால் நோய்வாய்ப்பட்ட பின் மாரடைப்பு வந்ததால் மரணத்தை தழுவினார். இவரின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சன் தனிப்பட்ட முறையில் இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.