தேசத்திற்கு பெருமை தேடித்தந்த நீலகந்த் பிரகாஷ்
கணித ஒலிம்பிக் போட்டியானது இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்ற மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்கில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தங்கப்பதக்கத்தை வென்றார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து எம்எஸ்ஓம் எனப்படும் மனத்திறன் மற்றும் மன விளையாட்டுகளுக்கான ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் நடைபெற்று வருகிறது.
இதில் உலகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் பங்கேற்று தங்களது திறமையை நிருபித்து வருகின்றனர். 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்குகொண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று லண்டனில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 13 நாடுகளைச் சேர்ந்த 29 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா சார்பாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நீலகந்த் பிரகாஷ் என்பவர் கலந்துகொண்டு விளையாடினார். இவர் 20 வயது நிறைந்த இளைஞர். இந்த ஒலிம்பிக் போட்டியானது பல கடினமான சுற்றுகளை கொண்டது.
இதனை வெல்வது என்பது மிகவும் சவாலானது. அந்த சவாலான சூழலை இளைஞர் நீலகந்த் பானு பிரகாஷ் அவர்கள் 65 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதுவரை இந்தியா சார்பாக வென்ற முதல் தங்கப்பதக்கம் திருநீல கந்த் பிரகாஷ் அவர்கள் உடையதாகும். தேசத்திற்கு பெருமை தேடித்தந்த நீலகந்த் பிரகாஷ் அவர்களை அரசு வெகுவாகப் பாராட்டி உள்ளது.
இந்த மைன் கேம்ஸ் ஒலிம்பிக் போட்டியானது 1997 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதில் இந்தியா சார்பாக பங்கு கொண்டு வெற்றி பெற்றோம் என்பது இன்னும் பெருமைக்குரியதாக கருதப்படுகின்றது.