உங்கள் குழந்தைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
உங்கள் செல்லப் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். என்னென்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். என்பதை ஆரம்பத்திலேயே கவனித்து சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் பெரியவர்கள் ஆகியும் இதை அப்படியே உங்கள் ஜெராக்ஸ் ஆக திகழ்வார்கள். நீங்கள் என்ன சொல்லிக் கொடுத்தாளும் அவர்களும் அப்படியே செய்வார்கள். என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்கு நல்லது எது, கெட்டது எது என்று சிறுவயது முதலே சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். வளர்ந்த பிறகு என் பிள்ளை என் பேச்சைக் கேட்கவில்லை என்று வருத்தப்படுவது ஒரு பயனும் இல்லை. உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறுவயதிலிருந்தே அக்கறை எடுத்து கவனித்து சமைத்துக் கொடுத்து பழக்க வேண்டும்.
வயது வந்த பிறகு அவர்களுக்கும் சிறு சிறு விஷயங்களை சொல்லிக் கொடுப்பதும், சிறு சிறு வீட்டு வேலைகளை செய்ய வைப்பதும், உங்கள் கையில் தான் உள்ளது. எல்லா பிள்ளைகளுக்கும் எல்லா நிலைமையும் தெரிந்திருக்க வேண்டும். யாரும் பிறக்கும் போதே அனைத்தும் பெறுவதில்லை. அனுபவத்தை பெற்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.
சுதந்திரமாக
அவர்கள் தெரிந்து கொள்ளட்டும், என்று விட்டு விடாமல் உங்களால் முடிந்த உதவிகளையும் சிறுவயது முதலே அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கலாம். இது அவர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருப்பதுடன், வாழ்க்கையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வழி வகுக்கும். பிள்ளைகளை சுதந்திரமாக வளர்க்கிறோம் என்பதால், அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாமல் அதிகப்படியான சுதந்திரத்தையும் கொடுக்க வேண்டாம்.
பிள்ளைகள் ஆசைப்படுவதை உடனடியாக வாங்கிக் கொடுப்பதையும், பெற்றோர்கள் பழக்கப்படுத்த கூடாது. அந்த காலத்தில் பெற்றவர்கள் ஒரு பொருளை வாங்கிக் கொடுக்க அதன் அருமை தெரிய வேண்டும். என்பதற் காகவே கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்க மாட்டாங்க. அதே போல இந்த காலத்திலும் பிள்ளைகளை விட்டு தான் பிடிக்க வேண்டும். அடம் பிடித்தாலும் அழுதாலும் உடனடியாக அவர்கள் கேட்பதை செய்து கொடுத்து பழக்காதீர்கள். இது சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தில் கொண்டு போய் விடும்.
ஒப்பிட்டு பேசாதீங்க
பிள்ளைகளை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு பேசாதீர்கள். பிள்ளைகள் முன்பு பெற்றோர்கள் சண்டையிடுவது, தேவையற்ற வார்த்தைகளை விடுவதோ கூடாது. பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நீங்கள் நடந்து கொள்வதை வைத்து அவர்களும் கற்றுக் கொள்கிறார்கள். பார்த்த உடனே சில விஷயங்களை ஈசியாக எடுத்துக் கொள்வது பிள்ளைகளின் குணம். அதனால் அவர்கள் முன்னாடி எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து தான் பேச வேண்டும்.