உங்க பட்ஜெட் மிச்சமாக இத செய்யலாமே..!!
மாங்காய் சீசன் என்பதால் விலை மலிவாக கிடைக்கும். இந்த நேரத்தில் மாங்காய் வாங்கி ஊறுகாய் போட்டு வைத்து விடுவது நல்லது. வெறும் மாங்காய கட் பண்ணி வெயில்ல காய வச்சு, நல்லா காய விட்டு அதை மிக்ஸியில் அரைத்து, எடுத்தால் மாங்காய் பொடி தயார். இது சாம்பாருக்கு தூவி விடும் போது சாம்பார் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
மாங்காய் ஊறுகாய் : பெரிய மாங்காயை இரண்டு வாங்கி கடையிலிருந்து வாங்கி வந்து, நன்றாக கழுவி ஈரத்தை துடைத்து துருவிக் கொள்ளுங்கள் அல்லது பொடியாக நறுக்கியும் செய்யலாம். மாங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் நல்லெண்ணெய் 2 கரண்டி விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் சிறிது சேர்த்து, பொரிந்ததும் மாங்காயை சேர்த்து வதக்கவும். வதக்கும் போது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
மாங்காய் சிறிது வதங்கியதும், மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு ஏற்ப மிளகாய்தூள் சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும். மாங்காய் வதங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் பண்ணிடுங்க. ஆறவைத்து அதை ஒரு சிறிய ஜாடியில் மாற்றி வைக்கலாம்.
இஞ்சி பூண்டு ஊறுகாய் : இஞ்சி 50 கிராம்,150 கிராம் பூண்டு தோல் சீவி துருவி வச்சுக்கோங்க. மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தும் செய்யலாம். உங்களுக்கு எப்படி பிடிக்குமோ அப்படி ரெடி பண்ணி வச்சிக்கோங்க. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 2 கரண்டி விட்டு, கடுகு, வெந்தயம், கடுகு ஒரு ஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் 5 சிட்டிகை, தாளித்து இஞ்சி, பூண்டு அரைத்த கலவை சேர்த்து எண்ணெயில் வதக்குங்க, பச்சை வாசனை போகும் போது உப்பு சேர்த்துக்கோங்க.
தேவையான அளவு மிளகாய் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் பண்ணி இருந்த ஆறவைத்து ஒரு ஜாடியில் எடுத்து ஸ்டோர் பண்ணிடுங்க. இந்த ஊறுகாய் மிக சுவையாக இருக்கும். இது தோசைக்கு சைடிஷாக சாப்பிடலாம். இட்லிக்கு சைடிஷாக சாப்பிடலாம். சாப்பாட்டுக்கு சைடிஷாக தயிர் சாதத்துக்கு சுவையா இருக்கும். இத செஞ்சு பாருங்க.
இந்த ஊறுகாய் எல்லாம் இந்த சம்மர் டைம்ல செஞ்சு வீட்ல வெச்சுக்கோங்க. கடையில் வாங்கும் விலையை விட வீட்டில் செய்யும் போது செலவு மிச்சம் ஆகும். கடாயில் ஒரு பாட்டில் வாங்கும் போது, வீட்டில் இரண்டு பாட்டில் ஸ்டோர் செய்ய முடியும் அதே செலவில்.