செய்திகள்தமிழகம்தேசியம்விளையாட்டு

யாக்கர் கிங்கின் குட்டி தேவதை

யாக்கர் கிங் தங்கராசு நடராஜன் தன் மகளின் ஆறுமாத பிறந்த நாளை நேற்று கொண்டாடி இன்று அதனின் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

தங்கராசு நடராஜன்

ஐபிஎல் டி20 தொடர்களில் ஐதராபாத் அணியில் பிரமாதமாக விளையாடி இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் பிளேயிங் லெவனில் இடம் பெற்று பவுலிங்கில் கலக்கினார்.

யாக்கர் கிங்

இந்திய அணியில் இடம்பெற்ற முதலே அவர் தன் இடத்தை தக்க வைக்கும் விதத்திலும் தன் திறமையை பறைசாற்றும் விதத்திலும் பிரமாதமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றி வாகையை சூடும் பெரும் பங்கு வகித்தார்.

குட்டி தேவதை

அந்த வெற்றித் தருணத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பிக்கும் வகையில் அவரின் மனைவி குட்டி தேவதையை பெற்றெடுத்தார்.

நெகிழ்ச்சியான தருணம்

தங்கராசன் நடராஜான், தன் மனைவி பிரசவிக்கும் பொழுது தான் பக்கத்தில் இல்லாமல் தன் தாய்நாட்டின் கடமையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி கொண்டிருந்தேன். நேற்று என் குட்டி தேவதை ஆறுமாத பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினோம் என்று தன் சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/COkZuBONkVo/?igshid=heeppcdn0qlb

1/2 பர்த்டே இப்போ எல்லாரும் பழகிக்க வேண்டி தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *