உலகில் முதல் சிவன் கோவில் ‘உத்திர கோச மங்கை’
தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று ‘உத்திர கோச மங்கை’. ராமாயண காலத்திற்கு முன்பிருந்தே இந்த கோவில் சிறப்பு பெற்று விளங்குவது அறியப்பட்டுள்ளன. பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஆலயம் இது.
- ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தரகோசமங்கை ஆலயம்.
- காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
- தளத்தின் முழு பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’.
திரு உத்திர கோச மங்கை
தளத்தின் முழு பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’. திரு என்றால் அழகு, சிறந்த என்ற இரண்டு பொருள் உண்டு. உத்திரம் என்பதற்கு ரகசியம் என்றும், கோசம் என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள். மங்கை என்பது அம்பாளை குறிக்கும். அம்பாளுக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திர விளக்கத்தை இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருள்.
உத்தர கோச மங்கை ஆலயம் தினமும்
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்.
தனித்தனி ராஜகோபுரம்
எல்லாத் தளங்களிலும் இறைவனும் இறைவியும் சமேதரராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. மங்களநாதர் என்ற பெயரானது இறைவன் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பெயராகும்.
இடையூறுகளில் இருந்து விடுபட
முன்னோர் சாபம், திருமணத்தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டு பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட இத்தல இறைவன் வழிவகை செய்கிறார்.
தினமும் இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை. பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
மேலும் படிக்க : பஞ்ச பூத கோவில்கள்:-