ஏனுங்க டெல்லி கேப்பிடல்ஸுக்கா இந்தவாட்டி கப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸை திணறடித்த டெல்லி கேப்பிடல்ஸ். ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்த்து 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தழுவியது டெல்லி கேப்பிடல்ஸ். பேட்டிங் பவுலிங் என்று செம பார்ம்ல இருக்காங்க… இந்தியாவின் தலைநகரம்னா சும்மாவா!
- தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தனர்.
- நானும் அடிப்பேன் என்று இறங்கிய பென் ஸ்டோக்ஸ் அரைசதத்தை நெருங்கும் தருவாயில் விக்கெட்டை இழந்தார்.
- பிரமாதமாக பந்து வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர்.
- நீங்க தான் வீசுவீங்களா நானும் வீசுவேன்- ரவிச்சந்திரன் அஸ்வின்.
டெல்லி கேப்பிடல்ஸ்
போட்டியின் டாஸ்ஸை வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து அருமையான இன்னிங்சை தந்தது. தவான் மற்றும் ஐயர் தலா 57 மற்றும் 53 ரன்கள் குவித்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து டெல்லி அணியின் மொத்த ஸ்கோரை நூற்றுக்கு மேல் கொண்டு வந்ததால் பின்வந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் அதிகம் இல்லாமல் 14,18 என ரன்களைக் குவித்து ஆட்டத்தை இழந்தனர். 161 ரன்களைக் குவித்த டெல்லி அணி ராஜஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது
ஜோஃப்ரா ஆர்ச்சர்
அருமையான பந்துவீச்சுடன் தொடங்கியது ராஜஸ்தான் அணி. ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் டெல்லியின் ஓபனர் பிரித்வி ஷா பூஜயத்திற்கு விக்கெட்டை இழந்தார். மேலும் 4 ஓவரில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து சாதனை பெற்றார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
பேட்டிங்கில் இறங்கி கலக்குவார்கள் என்று எதிர்பார்த்த ராஜஸ்தான் ஓபனர்ஸ் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தலா 41 மற்றும் 22 ரன்களில் ஆட்டத்தை இழந்ததில் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.
சஞ்சு சாம்சன் மற்றும் ராபின் உத்தப்பா சற்று தோல் கொடுத்தாலும் ஆட்டத்தை இழந்தபின் ராகுல் தேவாடியாவால் தனியாக ஆட்டத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. அதோடு ராஜஸ்தான் அணியின் அடித்தளம் சற்று நடுக்கத்தை காண போட்டியில் தோல்வியை சந்தித்தது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
பிரமாதமான பேட்டிங்கைத் தொடர்ந்து பந்துவீச்சும் பட்டையைக் கிளப்பியது டெல்லி அணி. சென்னைப் பையன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்து ராஜஸ்தானுக்கு தண்ணி காட்டினார்.
ப்ளேயர் ஆப் தி மேட்ச்
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜேவிற்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இவர் 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஜோஸ் பட்லர் மற்றும் ராபின் உத்தப்பா என முக்கியமான விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டு விக்கெட்டும் ஸ்ட்ரைட்டா ஸ்டம்பில் பட்டு போல்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வெற்றியை கட்டித் தழுவி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் மற்ற அணிகளுக்கு சின்னதாக பயம் வருவதும் இவர்கள் கப்பை அடுத்து விடுவார்களோ என்ற எண்ணம் வருவதும் இயல்புதானே!