தொடர்ச்சிக்கு தடை எது?
புத்தக உலகத்தின் தீனி
புத்தக உலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் மனதின் இயக்கங்களை பற்றியும், இலட்சியங்களை அடைவதை பற்றியுமே அதிகமாக உள்ளது. அதிலும் தொடர்ச்சியாக ஒரு செயலைச் செய்து வெற்றி காண்பது எவ்வாறு என்பதை பற்றி மிக அதிகமாகவே உள்ளது. அப்படிப்பட்ட புத்தகங்களின் விற்பனைகளும் அதிகமாக உள்ளது.
மக்களிடையே உள்ள சிக்கல்
பெரும்பாலானவர்கள் தங்களின் வாழ்வில் ஏதோ ஒரு பழக்கத்தை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றே விரும்புகின்றனர். மேலும் தங்களை சீர்திருவத்தம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இன்று செய்த ஒரு வேலை நாளை செய்ய இயலவில்லையே? எந்த காரணிகளை உணர நான் தவறுகிறேன் என்ற புலம்பல்களும் அதிகமாக இருப்பதை நம்மால் காண இயல்கிறது.
தொடர்ச்சி என்னும் மாயை
இன்று செய்த ஒரு வேலையை நாளையும் செய்ய வேண்டும், மற்றும் இன்று செய்த அதே நேரத்தில் நாளையும் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு பெரும்பாலும் பரவலாக இருக்கின்றது. எதார்த்தத்தை கூற வேண்டும் என்றால், ஒவ்வொரு நாளும் இந்த பூமி கோடிக்கனக்கான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. லட்ச்சக்கணக்கான பரிமானங்களையும் எட்டிக்கொண்டு இருக்கின்றது. அப்படி இருக்க, நான் செய்யும் வேலையில் எந்த மாற்றமும் நிகழாமல் இன்று நடந்தது நாளை நடக்க வேண்டும் என்றே மனிதன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறான். வஇயற்கையின் எதார்த்தத்தில், ‘மனிதர்களுக்கு ஒரே நிகழ்வுகள் நடக்க வேண்டும்’ என்று எந்த சட்டங்களும் எழுதப்படவில்லை. இந்த தன்மையை புரிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று.
தொடர்ச்சியை தடுக்கும் மனப்பாங்கு
மேற்கண்ட புரிதல்கள் ஒருபுறம் இருக்க, உண்மையில் நம் செயல்களின் தொடர்ச்சியை தடுக்கும் சில முக்கிய குற்றவாளிகள் உண்டு. அவை என்னவென்றால்,
அ. பிறரின் இலட்சியங்களை நம் இலக்காக எடுத்து, அவர் சாதிக்காததை நான் சாதிப்பேன் என்று பயணத்தை மேற்கொள்வது.
ஆ. நமக்கு இருக்கும் இலட்சியங்கள் உண்மையில் நமக்து தேவையா இல்லையா என்ற புரிதல்கள் இல்லாமல் ஓடிக்கொண்டு இருப்பது.
இவை இரண்டும் நம் செயல்களின் தொடரச்சியை கெடுக்கும் முக்கிய காரணிகளாகும்.