வாழ்க்கை முறைவாழ்வியல்

உடல் எடையை தீர்மானிப்பது எவை?

உடல் எடை அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவு, எடுத்துக் கொள்ளும் நேரத்தை பொருத்து அமைகிறது. அன்றாடம் இரவு 7 மணிக்குள் இரவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் சாப்பிடுவதால் எடை கூடலாம். நாம் விழித்திருக்கும் நேரத்தில் மட்டுமல்லாமல் எல்லா நேரத்திலும் தேவைப்படுவது உடல் ஆற்றல்.

உடலில் ரத்த ஓட்டம், நுரையீரல் செயல்பாடுகள் மற்றும் மூளை செயல்பாட்டிற்கு உடலில் கலோரிகள் எரிக்கப்படுவது நாம் தூங்கும் போது தான். இதனால் உடல் எடை அதிகரிப்பது, குறையவோ செய்யாது. தினமும் எந்த விதமான உணவுகளை உட்கொள்கிறோம் என்பதை பொருத்து உடல் எடை தீர்மானமாகிறது.

இரவில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது தானா. மெட்டபாலிசம் என்பது உடலில் சிக்கலான செயல்முறை. தினமும் உடலின் மெட்டபாலிசம் அன்றைய தினம் முடியும் போது குறையத் தொடங்கும். இவற்றால் கலோரிகள் எரிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மெட்டபாலிசம் குறைய தொடங்கினால் இயக்கமும் முற்றிலுமாக தடைப்படும் என்று சொல்ல முடியாது.

கலோரிகள் மெட்டபாலிசத்தை உணவுகளால் மாற்றப் போவது இல்லை. பகல் நேரங்களில் கலோரிகள் அளவு உட்கொள்வதால் குறைவதில்லை. இரவில் உணவு உண்பதால் உடல் எடை கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் கிடையாது என்று ஆய்வில் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் தேவைக்கு ஏற்ற கலோரி உணவுகளை உட்கொள்ளுதல் அவசியம்.

இரவில் தூக்கம் இல்லாமல் ஏதாவது சாப்பிடுவது ஆயில் புட், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்ற கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடத் தோன்றுகிறது. இதனால் மனஅழுத்தம், பதட்டம் உள்ளவர்களுக்கு இரவில் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். வங்கி கணக்கை போன்றது தான் உணவு சாப்பிடும் பழக்கம். சாப்பிடுகிற உணவு அளவை பொறுத்து கலோரிகள் அதிகரிக்கும். அவற்றை அன்றைய நாளிலேயே செலவிட்டு விட்டால் எடைகள் அதிகம் ஆகாது.

இரவில் அதிகம் உட்கொண்டால் பகல் உணவில் அவற்றை சரி செய்ய வேண்டும். அதிகப்படியான உடல் உழைப்பு, உடற்பயிற்சி, பகலில் உணவுகளை கட்டுப்படுத்துதல் இவற்றால் கலோரிகளை சமன் செய்ய முடியும். அதிகப்படியான உணவால் உடல் எடை கூடுகிறது என்பதை விட கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பது தான் உடல் எடை தீர்மானிக்க உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *