#BREAKING | எங்கே வர வேண்டும்..? – இபிஎஸ் எதிர் சவால்..!
நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி, எங்கே வர வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஈரோட்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடினார்.
அதில், எடப்பாடி பழனிசாமிக்குப் பொய் சொல்வது கை வந்த கலையாக மாறிவிட்டது.. பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது யார்? இது மட்டுமா பொள்ளாச்சி சம்பவம் கோடநாடு வழக்கு, நீட் வழக்கு என அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். இப்படி தொடர்ச்சியாகப் பொய்களைச் சொல்லி வருவதால் பொதுமக்கள் அவரை பச்சைப் பொய் பழனிசாமி என்றே அழைக்கின்றனர் என்று காட்டமாக தெரிவித்தார்.
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர்செல்வமும் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள். நீட் தேர்வு தொடர்பாக எந்தவொரு விவாதத்திற்கும் தயாராகவே உள்ளோம். எடப்பாடி பழனிசாமி நீட் விவகாரத்தில் ஆளுநர் மற்றும் பாஜக அரசிடம் கேட்கப் பதுங்கியதால் தான் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலேயே நாம் 60% இடங்களை வென்றோம். இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும்.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விட்டிருந்தார்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு குறித்து விவாதிக்க நானும் ஓ.பன்னீர்செல்வமும் தயாராக இருக்கிறோம் என எதிர் சவால் விடுத்துள்ளார்.