ஆரோக்கியம்செய்திகள்

எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்..?

எண்ணெய் குளியல்:-

எண்ணெய் குளியல் சித்தமருத்துவத்தில் நோய் அணுகாமலும் நோயை தீர்க்கும் இன்றியமையாத முறையாகும். பல சித்தர்கள் இதை குறிப்பிட்டிருந்தாலும் தேரையர் தன்னுடைய தைலவர்க்க சுருக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

குளிக்கும் முறை : – சூரிய உதயத்தின் முன்னே அதிகாலையில் நல்லெண்ணெய் (அ) அவரவர் தேகிக்கேற்ற தைலம் தடவி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

உகந்த கிழமை:-

ஆண்கள் – புதன், சனி மற்றும் ; பெண்கள் – செவ்வாய், வெள்ளி ஆகிய தினத்தில் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

எண்ணெய் தேய்க்கும் கவனிக்க வேண்டியவை:-

  1. செவியில் -3 துளி தலை பிணி போகும். 2. கண்ணில் – 2 துளி ; செவி பிணி தீரும். 3.பாதத்தில் தேய்க்க கண்பிணி போகும். 4.தலையில் தேய்க்க உடல் முழுதும் நன்மை, பத்தியம்,

தவிர்க்க வேண்டிய உணவுகள்:-

அசைவம் ,மோர்சாதம், பகல் தூக்கம், வெயிலில் திரிதல், பெண்போகம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் குளியலின் பயன்கள்:-

பித்தம் தனியும் , தலைவலி நீங்கும் * ஐம்பொறிகள் வன்மையடையும் * தலை,முழங்கால், கால் ஆகியவை வன்மையடையும் * மயிர் வளரும் * உடல் வறட்சி, சொறி, தினவு, அழுக்கு முதலியவை போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *