ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்தேசியம்யூடியூபெர்ஸ்

Ayodhya ram mandir : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இசைக்கும் ராமாயணம்

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறும் நிலையில், கோவையில் இன்று 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை கேஎன்ஜி புதூர் பகுதியில், பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம பெருமான் சீதை மற்றும் லட்சுமணன், அனுமாருடன் இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ராமயண புத்தகத்தை வைத்து ராமாயணம் பாடி வழிபாடு செய்தனர். மேலும் பெண்கள் ஒன்று கூடி ராமாயண பக்திபாடல்களை பாடியும், தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.

இன்று பகல் 12 மணிக்கு துவங்கியுள்ள இந்த ராமாயணம் பாடும் நிகழ்ச்சியானது நாளை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது என பஞ்சாபி அசோசியேசன் அமைப்பின் தலைவர் அமித் மாத்தூர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *