புது வாட்ஸ் அப் அப்டேட்
வாட்ஸ் அப் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றையும் ஒன்றாக்கி ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக்கின் கிளை நிறுவனமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஒன்றிணைத்து மூன்று ஆப்கலின் நண்பர்களோட எளிமையாக சாட் செய்யும் வசதியையும் வெளிக்கொண்டு வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இவற்றின் மூலமாக வாட்ஸப்பில் மட்டுமே நீங்கள் இருந்தாலும், இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் உரையாட முடியும் என்பது தெரிய வருகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டுகள் தான் நடைமுறைக்கு வரும் என்றும் சொல்லப்பட்டு உள்ளனர்.
மேலும் டார்க் மோட் அப்டேட் இனி whatsapp.web மற்றும் டெஸ்க்டாப் ஆப் ஆகியவற்றிலும் கிடைக்க உள்ளன. சமூக வலைதளமான வாட்ஸ் அப் அவ்வபொழுது புதிய அப்டேட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மொபைல் போன்களுக்கு வழங்கிய டார்க் மோட் அப்டேட்டை தற்பொழுது whatsapp.web மற்றும் டெஸ்க்டாப் ஆப் ஆகியவற்றிலும் வழங்கியுள்ளன.
டார்க் மோட் அப்டேட்
இந்த டார்க் மோட் அப்டேட் மட்டுமின்றி, ஸ்டிக் அனிமேட்டட் ஸ்டிக்கர்கள், க்யூ ஆர் கோட் மூலம், கான்டாக்ட் கலை சேர்க்கும் வசதி வீடியோ கால்களில் அதிகபட்சம் 8 பேருடன் உரையாடுவதற்கும் அப்டேட்கலுடன் கூடிய வசதியையும் வழங்கியுள்ளன.
வியாபாரம் செய்பவர்கள் தங்கள் பொருட்களின் விலை உள்ளிட்ட தகவல்களை பரிமாறிக்கொள்ள பேமெண்ட் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் செயலி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வாட்ஸ்ஆப் பிசினஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
வாட்ஸ்ஆப் பிசினஸ்
வாட்ஸ்ஆப் பிசினஸ் வசதியின் மூலம் தனிநபர்கள் இலவசமாக வியாபாரிகள் கட்டணம் செலுத்தியும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது. கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த சேவையை உபயோகப்படுத்தலாம்.
வாட்ஸ் ஆப் செயலியின் மூலம் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்ப கூடிய வசதி அறிமுகப்படுத்தியது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.