செய்திகள்தமிழகம்தேசியம்

ரஜினி குருமூர்த்தி தீவிர ஆலோசனை என்ன முடிவு

நடிகர் ரஜினிகாந்திற்கு குறித்து மருத்துவம் தகவல்கள் கடந்த வாரம் பெரும் அரசியல் அலையை வீசியது. இதற்கு அடுத்த ரஜினி முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கிடையே ரஜினி துக்ளக் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தியிருக்கின்றார்.

  • ரஜினியின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் நோய் காலமாக இருப்பதால் உடல்நிலையில் கவனமுடன் இருக்க மருத்துவ ஆலோசனை உண்மை ஆனால் கடித அறிக்கை ரஜினி வெளியிடவில்லை.
  • அரசியல் களத்தில் அனல்பறந்த ரஜினி அறிக்கை, துகளக் ஆசிரியர் குருமூர்த்தியுடன் தீவிர ஆலோசனையில் ரஜினி

தேர்தல் வந்தால் ஊர் ஊராகத் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டும். அரசியல் பணி கடுமையானதாக இருக்கும். களத்தைச் சமாளிக்க உடல் நலம் ஆரோக்கியம் அவசியம் என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.

ரஜினி ஆலோசனை

குருமூர்த்தியுடன் ஆலோசனை செய்தபின் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியும். கொரோனா காலத்திற்கு முன்பே தீவிர அரசியலில் இறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா உலகத்தையே பெருமளவில் தாக்கி இருக்கின்றது.

மருத்துவ ஆலோசனை

ரஜினிக்கு உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்திருக்கின்றனர். இதன்படி அவர் அமைதி காக்க வேண்டி இருந்தது.

அரசியலில் அனல்பறந்த அறிக்கை

தொடர் அரசியலில் ரஜினி ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி ஆரோக்கியம் மட்டுமே அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுரை கொடுத்திருக்கின்றேன், இதுகுறித்து கடிதம் கடந்த வாரம் முழுவதும் பெரும் அளவில் அனல் பறக்க செய்தது. ஆனால் ரஜினி இந்த கடிதம் தன்னால் உருவாக்கப்பட்டது அல்ல இருப்பினும் இந்த கடிதத்தில் உள்ள மருத்துவம் ஆலோசனை உண்மைதான் என்று ஒப்புக் கொண்டு இருக்கின்றார்.

சவாலான சூழலில் ரஜினி

ரஜினிக்கு இது சோதனையான காலகட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த நிலையில் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி ரஜினி போயஸ்கார்டனில் சந்தித்து இருக்கின்றார். அவருடன் நடந்து ஆலோசனைக்குப் பின்பு அவர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று தெரியவருகின்றது.

மனற் நிர்வாகிகளுடன் ஆலோசனை

மன்ற நிர்வாகிகளுடன் அவர் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்பதும் இங்கு முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஏற்கனவே தனக்கு பதவி வேண்டாம் என ரஜினி கொடுத்த அறிவிப்பால் ரசிகர்கள் சற்று கலங்கி போயினர் ஆனால் அதன் பின்பும் அரசியல் பணி தொடர்ந்து செய்து வந்தனர்.

நடப்பு கொரோனாவால் முடிவுகள் மாறுமா

உலகமே எதிர்ப்பாரத இந்த கொடிய நோயால் முடங்கி இருக்க ரஜினியும் ஆரோக்கியம் குறித்த தெளிவான பாதையில் இருக்க வேண்டும் என்று இருந்திருக்கின்றார்.

அரசியல் பயணத்தில் ரஜினியின் நிலைப்பாடு

ஆனால் அவரது அரசியல் பயணத்தில் இயற்கை சூழல் அவருக்கு சவால்தான் ஒரு பக்கம் அவரை சீண்டும் அரசியல்வாதிகள் மறுபக்கம், நடப்பு நிலையில் ரஜினியின் உடல்நலம் அரசியல் சூழல் ஆகிய அனைத்தும் நடவடிக்கைகளையும் குறித்து ரஜினி தீவிர ஆலோசனை செய்து இருக்கின்றார்.

ரஜினி கூடிய விரைவில் ஒரு முழுமையான தகவல் அறிவிப்பார் என்று தகவல்கள் கிடைக்கின்றன பார்ப்போம் நல்லது நடக்கும் என்று ரஜினுக்கு இது போன்ற சவால்கள் எல்லாம் புதிதல்ல ஆனால் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்றுதான் பொருந்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *