சமையல் குறிப்புவாழ்க்கை முறை

மதுரை ஸ்பெஷல் என்னனு சொல்லுங்க.!!

மதுரை நாளே மல்லிகை பூ, பருத்திப்பால், ஜிகருதண்டா ஸ்பெஷல்  தாங்க. இதெல்லாம் மதுரையில் சாப்பிடும் போது அங்க கிடைக்கிற டேஸ்ட் நீங்க வேற எந்த ஊரில் சாப்பிட் டாலும் அந்த டேஸ்டு கிடைக்குமான்னு தெரியலிங்க.  எனக்கு கிடைக்கலனு தான் சொல்வேன்.

அதே போலத்தான் அந்த ஊரு சமையலும் தனி சுவை தெரியும். அந்த ஊரு பெண்களின் கைப்பக்குவமோ, என்னவோ வீட்டிலே தயாரித்த மசாலா பொருட்களை வைத்து தான் குழம்பு  செய்வாங்க. சமையல பார்த்தே சொல்லலாம் மதுரை சமையல்னு அப்படி இருக்குங்க. 

மதுரை ஸ்பெஷல் உருண்டை குழம்பு..!!

அந்த பக்குவத்தில் எனக்கு தெரிந்த மதுரை ஸ்பெஷல் உருண்டை குழம்பு எப்படி செய்யணும் சொல்றேன். 

நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு தேவையான உருண்டை குழம்பு இந்த அளவு செஞ்சா போதுமானதா இருக்கும். 

தேவையான பொருட்கள் / செய்முறை

கடலை பருப்பு நூறு கிராம், ஐம்பது கிராம் துவரம் பருப்பு இரண்டும் சேர்த்து ஒரு மணி நேரம் கழுவி நல்லா    ஊற வைத்து, நீரை வடித்து எடுத்து மிக்ஸில் போட்டு, சோம்பு  வாசனைக்கு சேர்த்து, உப்பு  போட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சிறிது பூண்டு பேஸ்ட், பெருங்காய தூள் சிறிது சேர்த்து மிளகாய் காரத்திற்கு வேண்டுமானால் சேர்த்துக்கலாம் இல்லைனா வேண்டாம். இதை கலந்து எலுமிச்சை அளவில் உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும் . 

புளி 25 கிராம் அளவுக்கு கரைத்து எடுத்து வச்சுருங்க. குழம்புக்கு தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் உரித்து முழுசாவே வைங்க, தக்காளி 2 நறுக்கியது, பூண்டு பல் உரித்தது 8 பல், கறிவேப்பில்லை தாளிக்க, கொத்தமல்லி  கொஞ்சம் நறுக்கி வைங்க, அரைக்க : தேங்காய் அரை மூடி துருவி முந்திரி, கசகசா, சீரகம், சேர்த்து பேஸ்ட் அரைத்து எடுத்துக்கங்க.  தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம் சோம்பு, வர மிளகாய், பெருங்காய தூள். பொடி வகைகள்: மஞ்ச தூள், தனியா தூள், மிளகா தூள், ஆட்சி குழம்பு தூள், உப்பு

ஒரு வாணலியில் தாளிக்க நல்லெண்ணெய் விட்டு தாளிக்க குடுத்த ஒவ்வொன்றும் கடுகு, வெந்தயம் சோம்பு, வர மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து தாளித்து விட்டு  வெங்காயம் சேர்த்து வதங்க விடவும். பிறகு பூண்டு பல் சேர்த்து வதங்கியதும், அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பொடி ஒவ்வன்றும் மஞ்ச தூள், தனியா தூள், மிளகா தூள், ஆட்சி குழம்பு தூள், தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து ஆயில் ல வதக்கவும். தண்ணீர்+ புளி தண்ணீர் சேர்த்து  உப்பு போட்டு கொதிக்க விடுங்க. குழம்பு ஒரு கொதி வரவும் தேங்காய்  பேஸ்ட் கலந்து இன்னொரு கொதி விடுங்க. கடைசியா பருப்பு உருண்டை பிடித்து வைத்த  உருண்டை ஒவ்வென்றாக எடுத்து ஒன்னு மேல் ஒன்னு ஒட்டாமல் குழம்பில் போட்டு 5 நிமிடம் மீடியமில் அடுப்பை வைத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *