Somavaara viratham : சோமவார விரதத்தன்று சிவனுக்காக என்ன செய்ய வேண்டும் ??
சோமாவார விரதம்
சோமவாரம் திங்கட்கிழமை இன்று சிவ பக்தர்கள் மற்றும் சோமவார விரதம் இருப்பவர்கள் இன்றைய நாளை சிவனை வேண்டி வழிபடுவார்கள்.
சிவபெருமானை வேண்டி சிவ மந்திரம் சொல்லி திங்கட்கிழமை இது வரும் சிவ வழிபாடு பூஜை செய்பவர்கள் குடும்பத்தின் சுபிட்சம் பெருகும் மேலும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.இருவருக்கும் உள்ள இருக்கும் சங்கட நிலை மாறும் குடும்பம் முன்னேற்றம் அடையும்.
சோமவார விரதங்கள் தொடர்ந்து கடைபிடிப்பவர்களும் உண்டு 5 திங்கள் மற்றும் 21 திங்கள் 16 திங்கள் கடைபிடிப்பவர்களும் உண்டு.
சோமவாரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடக்கும் மற்ற நாட்களைப் போல அல்லாமல் அது இன்னும் சற்று விமரிசையாக பக்தியுடன் நடக்கும் . சோமனுடன் பார்வதியும் இருக்கும் இந்த ஒற்றுமை படத்தை வைத்து வழிபாடு செய்வது சிறப்பு தரும்.
சிவ வழிபாடு செய்து பிரசாதம் படைத்து சாப்பிட்டு வர வாழ்வில் இன்பங்கள் பெருகி சங்கடங்கள் தவிர்த்து வெற்றி பெறலாம்
சோமவார விரதம் என்ன செய்வார்கள் ??
சிவன் பார்வதி ஒற்றுமையுடன் இருக்கும் விரதத்தை கடைபிடிப்பவர்கள் சோமவார விரதத்தை கடைபிடிப்பார்கள்.
கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் குடும்ப ஒற்றுமை என்பது சோமவாரம் விரதம் கடைப்பிடிப்பவர்களுக்கு அதிகரித்து காணப்படும்.
சோமவாரத விரதம் இருப்பவர்கள் காலை குளித்து முடித்து வழிபாடு நடத்துவார்கள்.
வில்வ இலை வைத்து சிவபெருமானுக்கு வழிபாடு நடத்துவது சிறப்பு தரும்.
வார வாரம் சோமவாரத்தில் நாம் கடைபிடிக்கும் இந்த விரத பழக்கங்கள் விசேஷ பலன்களையும் தரும்.