வானிலை அறிக்கை தொடரும் வடகிழக்கு பருவமழை
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு. இன்னும் நான்கு நாட்களில் தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்பு. கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் நெல்லை மாவட்டத்திலும், 16 சென்டிமீட்டர் மணிமுத்தாறு மாவட்டத்திலும் மழை பதிவாகி உள்ளது.

ஜனவரி 19 வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை ஓரிரு இடங்களில் பெய்யும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் இரண்டு நாட்களில் தூத்துக்குடி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.