ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்வாழ்க்கை முறை

செல்வம் செழிக்க எக்காரணம் கொண்டும் இதை செய்ய மறவாதீர்கள்….

சில குடும்பங்களில் என்னதான் கடவுளை வழிபட்டாலும் பிறருக்கு நன்மைகள் செய்தாலும் குடும்பம் செழிக்காமல் தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கும் அதைநினைத்து பல பேர் நாம் அப்படி என்னதான் தவறு செய்தோம் என் குடும்பத்திற்கு மட்டும் இப்படி எல்லாம் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே உள்ளது இவை தீர வழி இல்லையா என்று யோசிப்பது உண்டு.

நாம் அனைவரும் பெரிய பெரிய விஷயங்களில் மிக கவனமாக இருப்போம் ஆனால் வீட்டில் சாதாரணமாக பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அசட்டு தன்மையாக இருந்து விடுவோம். இதனால்தான் நாம் என்னதான் பாடுபட்டாலும் வீட்டில் நிம்மதி செல்வம் நிகழ்ச்சி ஆகியவை இல்லாமல் உள்ளது. அப்படி என்னென்ன விஷயங்களில் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் என்று பின்வருமாறு பார்ப்போம்..

எக்காரணம் கொண்டும் மறவாமல் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

  • நாம் அனைவரும் கோவிலுக்கு செல்வதே மன நிம்மதியை தேடித்தான், ஆனால் அங்கு சென்றும் பரபரப்போடு இருக்கக் கூடாது. எப்பொழுதும் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது வேகம், பரபரப்பு, வேறு சிந்தனைகள் ஆகியவை கூடாது . நிதானமுடன் தெய்வ சிந்தனையுடன் மட்டுமே நடக்க வேண்டும்.
  • கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்ததும் கை கால்களை கழுவ கூடாது சிறிது நேரம் வீட்டிற்குள் சென்று அமர்ந்து விட்டு பின்பு தான் கை கால்கள் கழுவ வேண்டும்.
  • புதன்கிழமைகளில் பவள மல்லிகைப் பூக்களால் மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் மேலும் கல்வி வளர்ச்சி ஏற்படும் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்
  • பசுவின் பால் கறக்கும் ஓசை, தயிர் கடையும் சப்தம், வேத மந்திர ஒலியை கேட்டபடி அதிகாலையில் கண்விழித்தால் அன்றைய நாள் மிக சிறப்பாக இருக்கும். மகாலட்சுமி தாயாரின் அருளால் அன்று நல்லதே நடக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் . சுபகாரியங்கள் நடக்கும்.
  • வீட்டில் உள்ள தென்மேற்கு மூலையில் அறையில் பணம் வைக்கும் பீரோ அல்லது பெட்டியை வைத்தால் செல்வம் செழிக்கும் வீட்டில் நிதிநிலை சிறப்பாக இருக்கும் பணப்பிரச்சினை என்றும் ஏற்படாது.
  • எப்பொழுதும் நாம் வாழும் வீட்டில் காலை மாலை ஆகிய இரு வேளையும் வீட்டை சுத்தப்படுத்தி விளக்கேற்றி வண்ண மலர்களால் வீட்டில் உள்ள சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து வாசனை பொருட்களால் பூஜை செய்து வழிபட்டு வர வீட்டில் என்றும் லட்சுமி கடாட்சம் ஏற்படும். மகாலட்சுமி நித்யவாசம் செய்வாள். மங்களகரமான நிகழ்வுகளை வீட்டில் நடக்கும்.
  • இரண்டு அமாவாசை பவுர்ணமி ஆகியவை ஒரே தமிழ் மாதத்தில் வந்தால் அதில் திருமணம் நடத்தக்கூடாது. இதனைக் கூர்ந்து கவனித்து சுப காரியங்கள் நடத்தும் நாட்களை முடிவு செய்ய வேண்டும்.
  • வீட்டில் உடைந்த சுவாமி சிலைகள் கிழிந்த படங்கள் கீறல் விழுந்த கண்ணாடியை வைத்திருந்தால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்படும் பண பிரச்சனை என்றுமே தீராத ஒன்றாக இருக்கும். குடும்பத்தில் மன நிம்மதி இன்றி காணப்படும் எனவே எப்பொழுதும் இதை கவனித்து உடைந்த பொருட்களை வீட்டில் வைக்கக்கடாது.
  • வெறும் நெற்றியாக எப்பொழுதும் இருக்கக் கூடாது. காலை மாலை நேரங்களில் அவரவர்களின் குடும்ப வழக்கப்படி திருநீறு திருமண குங்குமம் சந்தனம் ஆகியவை நெற்றியில் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க : திருப்புகழ் பாடல் 14 சருவும்படி (திருப்பரங்குன்றம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *