இயற்கை அழகை இயற்கையாக பெற வேண்டுமா..!!
கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் மறைந்து விடும். சோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க சூடான நீரில் இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு கண்களை கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்து வருவதால் சோர்வு நீங்கி கண்கள் பிரகாசிக்கும். சரும நிற அதிகரிப்பதற்கு ஆப்பிள் துண்டுகளுடன், பால் பவுடர், பார்லி பவுடர் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகம் கழுத்து கை வெயில் படும் பகுதிகளில் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் தோலின் நிறம் மாறி அழகை கூட்டும். பால் பவுடருக்கு பதிலாக பால் சேர்த்துக் கொள்ளலாம்.
தலை முடி நன்கு வளர்வதற்கு வெந்தயத்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து அல்லது இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் அதை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து வாரம் ஒரு முறை குளித்து வந்தால், உடல் சூடு தணிவதுடன் முடி நன்கு வளர இது உதவியாக இருக்கும்.
சருமம் அழகாக, பளபளப்பாக இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், பன்னீர் கலந்த கலவையை முகத்தில் தடவி வாரமிருமுறை அப்ளை செய்து வருவதால் சருமத்தின் அழகு கூடும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசை போல் செய்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்து விடும்.
செயற்கையான அழகு கிரீம்களை பயன்படுத்துவதால் முகத்தை பலவித பக்க விளைவுகள் ஏற்படும். என்று இயற்கை முறையில் அழகை இப்படி பராமரிப்பதால் இயற்கையாகவும் இருக்கும்.