வாழ்க்கை முறைவாழ்வியல்

கேஸ் சிலிண்டரின் காலாவதி தேதியை அறிந்து அதற்கேற்ப பயன்படுத்துங்க.!

சமையல் கேஸ் இணைப்பைப் பெறும் போது ஒவ்வொரு இணைப்பின் மீதும் இருவகையான இன்ஷூரன்ஸ் நுகர்வோரின் பெயரில் எடுக்கப்படுகிறது. அது சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது. மற்றொன்று நமது கேஸ் ஏஜென்சி நிறுவனம் எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகையை கேஸ் ஏஜென்சி கொள்ளும் நிறுவனங்களுமே செலுத்தி விடும்.

நாம் செலுத்த வேண்டியது இல்லை. எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட் சேதம் ஏற்பட்டால், அதற்கான தொகையை இன்சூரன்ஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும்.

சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில் சிலிண்டரின் விலை விபரங்கள் இருக்கும். இன்னொன்றில் காலாவதி தேதி குறித்த எண்கள் எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அதில் ஒரு ஆண்டை மூன்று மாதங்கள் வீதம் ஏ பி சி டி என நான்கு காலமாக பிரிந்திருப்பர்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்தை குறித்த ஆங்கில அகர வரிசையில் ஏ எழுத்தும். ஏ 9 என்றால் 2009 ஜனவரி மார்ச் மாதம் வரை என்றும்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை பி. பி 10 என்றால் 2010 ஏப்ரல் ஜூன் வரை

ஜூலை முதல் செப்டம்பர் வரை சி. சி 11 என்றால் 2011 ஜூலை செப்டம்பர் வரை.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் டி என குறிப்பிடப்பட்டு இருக்கும். டி 2 என்றால் 2002 அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்பது பொருள்

டி 4 என அச்சிடப்பட்டுள்ள சிலிண்டரை 2004 டிசம்பர் பின் பயன்படுத்தக்கூடாது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கேஸ் சிறப்பும் பிராண்ட்களில் பணியாற்றுவோர் இன் கவனக்குறைவால் தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகின்றன என கூறப்படுகிறது.

எனவே கேஸ் சிலிண்டர் நுகர்வோர் தங்கள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும். கேஸ் சிலிண்டரின் காலாவதி தேதியை அறிந்து அதற்கேற்ப பயன்படுத்த வேண்டும். தரமான சிலிண்டர் என்று இதைக் கூறலாம். ஒரு சிலிண்டர் எரிவாயு நிரப்பும் தரத்துடன் தான் இருக்கிறது. என்பதை உறுதிப்படுத்த எண்ணை நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிலிண்டரில் ஓட்டை விழுவது போன்ற ஏதேனும் குறைகள் பரிசோதனையில் தெரிய வந்தால், அது சரி செய்யப்பட்டு இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்று பெற்ற பிறகு, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.

இரண்டாவது முறையாக குறை இருப்பது கண்டறியப்பட்டால் அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும். உணவுகளை உட் கொள்வதன் மூலம் உடல் உபாதைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதேபோன்று தினசரி பயன்படுத்தப்படும் சமையல் காஸ் சிலிண்டர் கூட காலாவதி ஆகும் வாய்ப்பு உள்ளது. என்ற தகவல் பலருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் காரணம் என்பது பலருக்கும் தெரியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *