இயற்கை அழகை பேரழகா மாற்றனுமா
சருமத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க தினமும் இதை பாலோ பண்ணுங்க. முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை இருக்கிறதா? கவலைய விடுங்க. முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன், கால் ஸ்பூன் சந்தனம், காய்ச்சி ஆற வைத்த பால் இரண்டு ஸ்பூன், இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து காயவைத்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இந்த பேக்கை வாரத்திற்கு மூன்று முறை செய்து வரலாம். இதனால் உங்கள் முகம் பளபளப்பாக பட்டுப்போன்று இருக்கும்.
- உங்கள் முகம் பளபளப்பாக பட்டுப்போன்று இருக்க.
- முகம் அழகு பெற. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்க.
- முகம் பளிச்சென்று இருக்க.
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் சிறிது நேரம் வைத்து விட்டு எடுத்துவிடலாம். இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கருவளையங்கள் நீங்கும். ஒவ்வொருமுறை பேக் முகத்தில் அப்ளை செய்து கண்களுக்கு வெள்ளரிக்காயை வைப்பது அவசியம். இதனால் முகம் அழகு பெறும். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வாரம் ஒரு முறை தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து முகத்திற்கு ஆவி பிடிக்கலாம். முகத்திலுள்ள செல்கள் புத்துயிர் பெற்று சருமம் பொலிவு பெறும். பப்பாளி, எலுமிச்சை, வாழைப்பழம் போன்ற பழங்களை ஏதாவது ஒன்றை அரைத்து முகத்திற்கு மாஸ்க் போடலாம். முகம் பளிச்சென்று இருக்கும்.
வாரம் ஒருமுறை நேரம் கிடைக்கும் போது உங்கள் கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்யலாம். கோக்கனட் ஆயில் தேவையான அளவு சூடு செய்து தலைக்கு அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்து விடலாம். முடி வறட்சி ஆகாமல், முடி நுனி பகுதி வெடிக்காமல் அடர்த்தியாக வளர இது உதவியாக இருக்கும்.
பனிக்காலங்களில் உதடு மென்மையாக இருக்க லிப் பாம்களை பயன்படுத்தலாம். சிறிது வெண்ணையை உதடுகளில் தடவி விடலாம். இதனால் உதடுகள் மென்மையாக இருக்கும். வரட்சி ஆவது தடுக்கப்படும்.