Jallikattu bulls

எதிர்த்து விளையாடும் எடப்பாடி பழனிச்சாமி!

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் நாற்காலியை அலங்கரித்த உடனே பலரும் கேட்ட கேள்வி யார் இவர் என்று தான்!

அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடையாத ஒருவர் காலத்தின் கோலத்தால் முதலமைச்சரானார்.

முதல்வர் பதவி பழனிச்சாமி

அவர் முதல்வர் பதவியை ஏற்றவுடன் ஆகவே ஒரு மாதத்தில் ஆட்சி கடையும் இரண்டு மாதத்தில் ஆச்சரியம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் பேசி வந்தார்கள் .

முதல் வருடம் முதல்வர் ஆட்சி

ஆனால் அதை எல்லாம் அழகாக எதிர்த்து நீந்தி தற்போது நான்கு வருட கால ஆட்சியை நிறைவு செய்ய இருக்கிறார். முதல் ஒரு வருடம் மிகவும் தடுமாற்றத்துடன் தான் ஆட்சியை நடத்தினார்.

இரண்டாம் ஆண்டு ஆட்சி

ஓபிஎஸ் அவர்களுடன் சமரசம் செய்துகொண்டு பிறகு நிதானித்து செயல்பட தொடங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய செயல்பாடு மிகவும் வேகம் படியாகவே இருக்கிறது.

துரிதப்பணியை செய்ய இறங்கியிருக்கின்றாரா

சட்டசபையில் எந்த கேள்விக்கும் சரியாக பதில் அளிக்காமல் இருந்த அவர் தற்போது எத்தனை முறை கேள்விகளுக்கும் நறுக்கென்று பதில் கூறுகிறார். மழை வெள்ள பாதிப்பு, புயல் பாதிப்பு போன்ற நேரங்களில் நேரடியாகவே வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் இறங்குகிறார்.

நேரடியாக களத்தில் இறங்கும் முதல்வர்

தற்போது பல இடங்களில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வை இடுவதால் அதிகாரிகள் பலரும் ஆச்சரியத்துடன் அவரை பார்த்து வருகின்றனர்.

இவருடைய மக்கள் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டிராபிக் ஜாம் செய்யாத சிஎம்

முக்கியமாக இவர் எந்த மார்க்கத்தில் சென்றாலும் பொதுமக்களை துன்புறுத்துவது கிடையாது. இவரால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது இவர் சென்று வந்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை அதுவரை இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியே போனால் அதிமுகவின் வாக்கு சதவீதத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டு விடுவாரோ என்று எதிர்க்கட்சிகள் பதறிக் கொண்டு இருக்கின்றன.

சா.ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *