நவக்ரஹ தோஷங்களை போக்க தேவிப்பட்டினம் செல்லுங்கள்
தேவிப் பட்டினம் நவபாஷாண கோவில் ராமநாதபுரத்தில் உள்ளன. தேவி பட்டினம் நவபாஷாண கோவில் நவகிரக தலங்களில் முக்கிய தலமாக திகழ்கிறது. இக்கோவில் கடலில் அமைந்துள்ளன.
- நவகிரக தலங்களில் முக்கிய தலமாக திகழ்கிறது இக்கோவில்.
- இக்கோவில் கடலில் அமைந்துள்ளன.
- ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்திற்கும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

பரிகார பூஜை, குழந்தை பாக்கியம், தர்ப்பணம் செய்பவர்கள் இத்தலத்திற்கு வந்து வணங்கி செல்வார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்திற்கும் அதிகமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

அதிகாலை முதல் மதியம் ஒரு மணிக்குள் இந்த நவகிரகங்களை தரிசனம் செய்வது சிறப்பு. மதியத்திற்கு மேல் மாலை நேரம் நெருங்க, நெருங்க கடல் உள்வாங்கி இந்த நவகிரகங்களை தரிசிக்க முடிவதில்லை.

கோவிலுக்கு செல்பவர்கள் மதியத்திற்குள் சென்றால் மட்டுமே இந்த நவகிரகங்களை தரிசனம் செய்து வழிபட முடியும். கடல் உள் வாங்குவது இயல்பு தான். சில நேரங்களில் வழக்கத்தை விட கூடுதலாக உள்வாங்கி காணப்படும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க : சிவராத்திரி பிரதோசம் ஒரு சேர வரும் சிறப்பு நாள்