இந்தியாவில் எஸ்- விக்ரம் ராக்கெட்
இந்தியா தனது முயற்சியால் தனியார் ராக்கெட் மின்னல் செலுத்த தயாராக இருக்கின்றது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஸ்ரீஹரிகோட்டாவின் இந்தியாவின் முதல் முறையாக தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட் விக்ரம் எஸ் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்த ப்பட உள்ளது. வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய விண்வெளி துறையில் முதன்முறையாக தனியார் துறை ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. இதனை ஹைதராபாத் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருந்தும் இந்த தயாரிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிறுவனத்தின் ராக்கெட் தயாரிப்பில் இந்திய விண்வெளி திட்ட இயக்குனர் விக்ரம் சாராபாய் அவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் விதமாக விக்ரம் எஸ் என்றும் பெயிரடப்பட்டுள்ளது.
ஸ்கைரூட்டானது இந்திய வானிலை நிலவரம் காரணமாக சரியான தேதியை நிர்ணயிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இந்தியாவில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரம் எஸ் ராக்கெட்டானது 19ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பதினெட்டாம் தேதி காலை 11:30 மணியளவில் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.