சினிமா

பிக் பாஸ் 4 (Bigg Boss 4 Tamil) மீண்டும் நம் முன்னே..

பிக் பாஸ் 4 (Bigg Boss 4 Tamil)  மீண்டும் நம் முன்னே.. 

தமிழ் நாட்டில் வட மாநில நிகழ்ச்சியான பிக் பாஸ் என்ற ஷோ நம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து தனது நான்காவது சீசனை வெற்றிகரமாக ஓடியது.

நான்காவது சீசனாகிய இதில் 80ல் முன்னனி நடிகையான ரேகா, பிரபல மாடலிங் அழகியான சனம் ஷெட்டி, சிறந்த பாடகர் மற்றும் சமிபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற வேல் முருகன், நடிகர் ஆரி அர்ஜூனன்,  மலேஷியாவில் தமிழால் சிரிக்க வைத்த நிஷா என பதினெட்டு பேர் பங்கேற்றனர்.

இந்த பிக் பாஸ் போட்டியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்திகளை கையாண்டனர். அதில் பிக் பாஸ் வெற்றியாளரான ஆரி அர்ஜூனன் நேர்மையை பயன்படுத்தியுள்ளார்.

நூறு நாட்களுக்கும் மேலாக நடந்த நிகழ்வானது சென்ற வாரம் நிறைப்பெற்றது. சுவாரஸ்யமாகவும் விருவிருப்பாக நடந்த ஷோவை கண்டுகளித்த ரசிகர்களுக்கு அடுத்த சிசனுகாக காத்திருந்த நேரத்தில் இதோ வந்துட்டேன் டா என்று சொல்வது போல் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் மீண்டும் ஒன்று இணைந்த நம் மனம் கவர்ந்த போட்டியாளர்களை உற்சாகமான வரவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பிக் பாஸ் வின்னர் ஆரி அர்ஜூனன்,  ரன்னர்  பாலாஜி முருகதாஸ், அதை தொடர்ந்து ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், என மோத்தம் 18 பேர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க : அதிரடி நாயகன் இறந்தும் நம்மை ஆளும் மரண மாஸ் ஹீரோ புருஸ்லீ

இந்நிகழ்ச்சியை டிடி என்கிற திவ்யதர்சினி நீலகண்டன் மற்றும் மா கா பா ஆனந்த்  தொகுத்து வழங்கினார்கள். நீண்ட கால இடைவெளைக்கு பிறகு டிடி இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் தொகுத்த அனைத்து நிகழ்வும் மக்களால் ரசிக்கும் படி அமைந்துள்ளது. அதையடுத்து  தனக்கு கொடுத்த இடத்தை மா கா பா ஆனந்த் நிறைவேற்றி வருகிறார்.  இந்த நிகழ்வும் அதே போல் கோலாகலமாக அமையும் என்று நினைத்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இவை வருகிற வாரங்களில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதில் கலந்துக்கொண்ட அனைவரும் ஆனந்தமாக உள்ளதை இப்படத்தில் காணலாம். விழாவில் பங்கேற்ற போட்டியாளர்கள் அவர் தம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்கள் அவையாவும் வைரல் ஆகி வருகிறது.

மேலும் படிக்க ; சினிமா உலகின் தலையாய விருதான ஆஸ்கர் தள்ளிப் போகின்றது

written by

Abirami

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *