கல்விபோட்டித்தேர்வுகள்

இந்திய கடற்படை நேரடி தேர்வு விபரங்கள்

மூன்று பரிமாணங்கள் நன்கு சீர் அமைக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்தது இந்திய கடற்படை. அதிநவீன கப்பல்களையும், நீர்மூழ்கி கப்பல்களையும், விமானங்களையும் கொண்டு செயல்படுகிறது இந்திய கடற்படை. விமானங்களைக் கொண்டு இயக்கப்படுகிறது இந்திய கடற்படை. கப்பல்கள் நல்ல பயிற்சி பெற்ற மாலுமிகளால் இயக்கப்படுகிறது. நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய ராணுவத்தின் ஒரு கிளை படையாக இந்திய கடற்படை உள்ளன. இந்திய கடற்படை தேர்வானது எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், உடல் தகுதி கொண்டவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்திய கடற்படையில் சிறந்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சீனியர் செகண்டரி தேர்ச்சிப்பெற்ற மற்றும் மெட்ரிக் படித்த மாணவர்கள் இப்பணியிடங்களுக்கு உண்டான தேர்வுகளை எழுதலாம். எல்லா வருடமும் டிஇ எனப்படும் நுழைவுத் தேர்வுகளை வருடம் இருமுறை என 2700 பணிகளை நிரப்பும் வகையில் இந்திய கடற்படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தேர்வானது எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதி கொண்டவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அப்ஜெக்டிவ் டைப் என்ற வினாக்கள் கேள்விகளாக இந்தியன் நேவியில் கேட்கப்படுகிறது. ஒரு 60 நிமிடத்தில் தேர்வுகளை எழுத வேண்டும். அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற +2 மாணவர்கள் இந்தியக் கடற்படை நேரடி தேர்வின் மூலம் பல பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். பணி நியமிக்கப்படும் விபரங்கள் இங்கு கொடுத்துள்ளோம்.

  • செயலர்
  • ஜென்ரல் சர்வீஸ் ஆபிசர்
  • சப்மைரன் ஆபிசர்
  • பைலட்
  • ஆபிசர் இன்பர்மேசன் டெக்னாலஜி
  • இன்ஸ்பெக்சன் ஆபிசர்
  • நேவல் ஆரமெண்ட் ஆபிசர்
  • டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
  • கோஸ்ட் கார்டு
  • இன்ஜினியர்
  • லேப் இன்ஜினியர்

இந்திய நேவியில் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி தேர்வில் கலந்து எழுதலாம். பிளஸ் 2 அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்பணியிடங்களுக்கு தேர்வு எழுத வேண்டிய தகுதிகள்.

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • திருமணமாகாத இளைஞர்கள் தேர்வுகளை எழுதலாம்.
  • வயது 17-20 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி 55 சதவிகித மதிப்பெண், அதற்கு மேல் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் பெற்றிருத்தல் அவசியம். 10 மற்றும் பிளஸ்2 மாணவர்கள் வகுப்பு தேர்ச்சியில் 55%, அதற்கு மேல் இயற்பியல் மற்றும் கணிதம் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி தேர்வு

உயரம் குறைந்தபட்சம் 157 சென்டிமீட்டர். 18 வயது இருக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற உடல் எடை அவசியம். 10% உடல் எடை அதிகம் அல்லது குறைவாக இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள். கண்ணுக்கு கண்ணாடி அணிதல் கூடாது. பார்வைத்திறன் 6/6, 6/9 இருக்க வேண்டும். உடலும், மனமும் ஆரோக்கியமாக, நோயில்லாமல் இருத்தல் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *