பிறந்தநாளை கோவாவில் கொண்டாடும் ஜோடி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பிறந்தநாளை கோவாவில் கொண்டாட்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன்
18 செப்டம்பர் 1985 பிறந்த தன் திரையுலக பயணத்தை 2008ல் மேற்கொண்டார். குறும்படத்தை எழுதி இசை அமைப்பாளர் இசை அமைக்கவைத்து அதனை இயக்கி தயாரிப்பாளர்களை அணுகினார். தயாரிப்பாளர் கிடைக்க குறும்படம் திரைப்படமாக மாறியது. அந்தக் கதைக்கு சிலம்பரசன் கதாநாயகனாக பொருத்தமாக இருப்பார் என தேர்ந்தெடுத்து சிலம்பரசனும் விக்னேஷ் சிவனும் இந்த கதை தளத்திற்காக வெளிநாடுகளில் ரவுண்ட் அடித்து நான்கு வருடங்களுக்குப் பின் 2012ல் போடா போடி ரிலீசாக இவர் திரையுலகில் அறிமுகமானார்.
திரையுலகில் கவிஞராக பாடல்களை எழுதிக் கொண்டு சில பாடல் காணொளிகளில் நடித்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். மேலும் 2014 தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் விக்னேஷ் என்ற துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாபெரும் வெற்றி 2015 இவர் இயக்கிய படமான நானும் ரவுடிதான் படம் மூலம் இவரை சேர்ந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரவுடிதான் படம் அனைத்து வகையிலும் சூப்பர் ஹிட்டாக இருந்தது.
போடா போடியில் ஆரம்பித்த இவர் பயணம் கவிஞராக பல பாடல்களை இவர் இயக்கிய படங்களில் மட்டும் அல்லாமல் வெவ்வேறு படங்களிலுக்கும் பாடல்களை எழுதி வந்தார். என்னை அறிந்தால் படத்தில் தல அஜித் நடனத்தில் வெளுத்து வாங்கும் அதாரு அதாரு பாடல் இவரின் எழுத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். அந்தப் படத்தின் பயணத்தில் தொடங்கியது விக்னேஷ் சிவன் நயன்தாரா நட்பு. அதுவே காதலாக மாறி ஐந்து வருட காதல் வெள்ளத்தில் இருவரும் திளைக்கின்றனர்.

தீர்க்கதரிசி சூர்யாவை கதாநாயகனாக கொண்டு பல திருப்பங்களை வைத்து இவர் இயக்கிய படம் தானா சேர்ந்த கூட்டம். நம்மை சொடக்கு மேல சொடக்கு போட வைத்தது இவரின் எழுத்துக்கள் தான்.
போடா போடியில் ஆரம்பித்த இவரின் கவிப் பயணம் இன்று மாஸ்டர் வரை தொடர்கிறது. இளைய தளபதி விஜய்க்கு இரு பாடல்கள் மாஸ்டர் படத்திற்காக எழுதியுள்ளார்.

சமீபத்தில் ஓணம் பண்டிகை அன்று விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் கொச்சினில் சென்று கொண்டாடிய புகைப்படங்களை அனைவரும் நம் சிலேட்குச்சி இணையதளத்தில் கண்டு மகிழ்ந்து இருப்பீர்கள். தற்போது கோவாவில் இவர்கள் விடுமுறையில் இளைப்பாறிக் கொண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
இன்று விக்னேஷ் சிவனின் 35வது பிறந்த நாளுக்கு மக்களின் சார்பாக சிலேட்குச்சி பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.