ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

அதிரடியான ஐந்து சமையல் டிப்ஸ்…

சமையல் என்பது பெண்களுக்கு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது .ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் மற்றும் வீட்டில் உள்ள பெண்களை சமையல் செய்வதை வைத்து எடை போடுவது கூட உண்டு. ஒரு வீட்டிற்கு செல்லும் மருமகள் சமையல் கலையில் வல்லுனராக இருந்து விட்டாலே போதும் குடும்பத்தில் அவர்கள் எல்லாரையும் தன் வசம் இழுத்து விடலாம் என்று பொதுவாக கூறுவார்கள்… இப்படி பெண்கள் தங்களின் அடையாளத்தை பெருமையை தக்க வைத்துக்கொள்ள சமையல் கலை வல்லுநராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்…

தினமும் என்ன சமைப்பது எப்படி சமைப்பது என்றெல்லாம் யோசித்து யோசித்து குழம்புவார்கள் இதையெல்லாம் விட பெரிய சவாலாக அவர்களுக்கு அமைவது சமையல் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதே..பரபரப்பான இவ்வுலகில் சமைப்பதே பெரிய சவாலாக இருக்கும் போது சமையல் பொருட்களை பாதுகாப்பது என்பது பெண்களுக்கு சிறிது கடினமாக தான் இருக்கும் இனி கவலை வேண்டாம்.. அனைவருக்கும் இப்போது கீழே கொடுக்கும் டிப்ஸ் சிலருக்கு மிக உதவியாக இருக்கும்… எங்களுக்கு தெரிந்த ஒரு சில விஷயங்களை உங்களுடன் பகிர்கிறோம் அதை பயன்படுத்தி நீங்களும் நேரத்தை வீணாக்காமல் எளிதில் சமைத்து மகிழுங்கள்…

உங்களுக்காக இதோ ஒரு சில டிப்ஸ்

  • தனியா விதைகளை சூடான வாணலியில் நன்றாக வறுத்து எடுத்து வைத்தால் வணடு விடாமல் பல வருடங்கள் வரை நன்றாக இருக்கும்…
  • கடலைப்பருப்பு பாசிப்பருப்பு போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுத்து எடுத்து வைத்தாள் பூச்சிகள் வராது . பருப்பின் சுவையும் நன்றாக இருக்கும்.
  • ஒரு சிலருக்கு வீட்டில் எவ்வளவு தரமான புலிகளை வாங்கினாலும் சீக்கிரம் கெட்டுவிடும் பூச்சி கடித்து விடும்…கொட்டை நீக்கிய புளியுடன் கல் உப்பை நன்றாக கலந்து புலிகள் அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • பருப்பு வகைகளுடன் மிளகாய்வற்றல் அல்லது வேப்பிலையை கலந்து வைத்தால் பூச்சி வராது..
  • அலமாரி தட்டுகளில் பேப்பர் விரிக்கும் முன் அதன் அடியில் சில வேப்பிலை கொத்துகளை பரப்பி அதன்மல் பேப்பர் விரித்து அதன்பின் தட்டுகளை அடுக்கினால் ஆடைகள் கரப்பான் பூச்சிகள் எறும்புகள் ஆகியவை அண்டாது…
  • முட்டை ஓட்டின் மேல் லேசாக நல்லெண்ணெய்யை தடவி வைத்தால் பிரிட்ஜில் வைக்க விட்டாலும் பத்து நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்.
  • அரிசியை மொத்தமாக வாங்கி வைப்பவர்கள் அத்துடன் சில துண்டு வசம்பு அல்லது வேப்பிலையை கலந்து வைத்தால் பூச்சி வண்டு வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *