உடல் சூட்டை தணிக்கும் நார்த்தங்காய் ரசம்
நாம் அனைவரும் நார்த்தங்காய் என்ற காய் வகையை அறிந்திருப்போம். ஆனால் பல பேருக்கு இதில் உள்ள நன்மைகள் தெரிவதில்லை. இந்த நார்த்தங்காய் அனைத்து காலங்களிலும் கிடைக்கும். இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், அஸ்கார்பிக் அமிலம், லிமோனின், சிட்ரல், கொழுப்பு அமிலங்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நார்த்தங்காயை நாம் உணவில் ஏதாவது ஒரு விதத்தில் எடுத்துக்கள்வதன் மூலம் ரத்தம் சுத்தமடையும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்புண் நீங்கும். உடலில் உள்ள சூடு தணியும். வாந்தி, பித்தம் ஆகியவை நீங்கும்.
இத்தனை நன்மைகள் வாய்ந்த நார்த்தங்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.உங்களுக்கு உதவும் வகையில் ஒரு எளிதான ரெசிபி மூலமாக இதன் பயன்களை நீங்கள் பெற முடியும். அந்த ஆரோக்கியமான ரெசிபியை பின்வருமாறு காண்போம்.
தேவையான பொருட்கள்
நார்த்தங்காய் ஒன்று
தக்காளி-2
துவரம் பருப்பு வேகவைத்த நீர் 2 கப்
இளம் இஞ்சி ஒரு துண்டு
பெருங்காயம், மஞ்சள்தூள் ,மிளகாய் பொடி ,கொத்தமல்லி பொடி ஆகியவை சிறிதளவு
கொத்தமல்லி தழை ,உப்பு, கடுகு ,வெந்தயம் நெய், தண்ணீர் ஆகியவை தேவையான அளவு
நார்த்தங்காய் ரசம் செய்யும் முறை
நார்த்தங்காய் விதையை நீக்கிவிட்டு அதிலுள்ள சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடானதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி ,மஞ்சள் ,மிளகாய் ,கொத்தமல்லி பொடி ,பெருங்காயம் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அவை அனைத்தும் நன்றாக வெந்தவுடன் துவரம்பருப்பு வேக வைத்த நீரை அதில் சேர்க்கவும். நுரைத்து வந்ததும் இறக்கி கடுகு வெந்தயத்தை நெய்யில் தாளித்து நறுக்கிய கொத்தமல்லி இலையை அதில் லேசாக தூவ விடவும் பெண் நார்த்தங்காய் சாதம் அவ்வளவுதான் சுவைமிக்க நார்த்தங்காய் ரசம் தயார்…
இவற்றை நீங்கள் சாப்பாட்டில் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது வெறும் ரசமாகவும் குடிக்கலாம். வாசனை மிக அருமையாக இருக்கும்.இந்த நார்த்தங்காய் ரசத்தை உண்பதன் மூலம் பசி உணர்வு அதிகமாக தூண்டும். ஜீரண சக்தியை மேம்படுத்தும்.