ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஈஸியான அதிரடி பச்சடி..!

ஒவ்வொரு நாளும் நம் நேரத்தை பிரஷாக இருக்க இந்த பச்சடிகள் உண்ணலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், அன்றைய நாள் சுறுசுறுப்புடனும் இருக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தரும் இந்த பச்சடி செய்து அசத்துங்கள்.

கேரட் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் : கால் கிலோ கேரட்டை கழுவி தோல் சீவி துருவிக் கொள்ளவும். மிளகு பொடி ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் 3 கீறியது, புளிப்பில்லாத தயிர் ஒரு கப், மல்லி தழை நறுக்கியது ஒரு ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை : ஒரு பாத்திரத்தில் தயிரை எடுத்துக் கொள்ளவும். அதில் தோல் சீவிய துருவிய கேரட், மிளகுப் பொடி, அரிந்த பச்சை மிளகாய், உப்பு, மல்லித்தழை போட்டு கெட்டியான தயிருடன் நன்கு கலக்கவும். தயிருடன் இவையெல்லாம் நன்கு ஊற வேண்டும். ஊறிய பிறகு தயிர் பச்சடியை பரிமாறலாம்.

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் : கெட்டித் தயிர் ஒரு கப், சிறிய வெள்ளரிக்காய் 1 துருவியது, பச்சை மிளகாய் ஒன்று, கறிவேப்பிலை, மல்லித்தழை, கடுகு, எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை : வெள்ளரிக்காயை தோல் சீவி விட்டு கழுவி துருவி வைத்து கொள்ள வேண்டும். அதில் உப்பு சேர்த்து அப்படியே மூடி வைக்கவும். 5 நிமிடத்திற்கு முன்னதாக வடிகட்டி விட்டு தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கடுகு தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, மல்லி இலை, போட வேண்டும். கடைசியாக தயிர் சேர்த்தால் தான் கெட்டியாக இருக்கும். கடைசியில் தயிர் சேர்த்து பச்சடியை பரிமாறலாம்.

வெங்காய பச்சடி

தேவையான பொருட்கள் : தயிர் அரை கப், பெரிய வெங்காயம் 4 துருவியது, தேங்காய்க் கீற்று 3, பச்சை மிளகாய் 3,

செய்முறை : தயிரை ஒரு துணியில் கட்டி, கொஞ்ச நேரம் அதில் உள்ள நீரை வடிகட்டி அந்த கெட்டித் தயிரை எடுத்து வைக்கவும். தேங்காய், பச்சை மிளகாய் விட்டு விழுதாக அரைத்து தயிரில் கலக்கவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் போட்டு கலக்கவும். அத்துடன் பெரிய வெங்காயத்தை வட்டமாக அரிந்து உப்பு சேர்த்து பிசறி நீர் இல்லாமல் பிழிந்து வடிகட்டி தயிரில் போட்டு கலக்கவும். தேவைப்பட்டால் முந்திரிப்பருப்பு, கச கசாவையும், அரைத்துப் போடலாம். சுவையான வெங்காய பச்சடி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *