சமையல் குறிப்புவாழ்க்கை முறை

மிக்ஸ்டு பொரியல்.!

ஒரே பொரியல் செய்தாலும் அதில் சத்துக்கள்நிறைந்திருக்க இந்த மாதிரியான பொரியல் ட்ரை பண்ணி பாருங்க. அதிக படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கும் மிஸ்டு பொரியல் உடன் குடமிளகாய் பொரியல் வாங்க பார்க்கலாம்.

மிக்ஸ்டு பொரியல்

தேவையான பொருட்கள் : கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன், மிளகாய் 5 , பெருங்காயம் ஒரு துண்டு, சீரகம் , உப்பு, ஆயில் தேவையான அளவு. கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது. உருளைக்கிழங்கு, காலிபிளவர், பீன்ஸ், கேரட், பரங்கிக்காய் தேவைக்கு ஏற்ப.

செய்முறை : கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து சிவக்க வறுத்து எண்ணெய் விட்டு கரகரப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். உருளைக் கிழங்கு தோளோடு நறுக்கவும்.

பிறகு காலிபிளவர், பட்டாணி, பீன்ஸ், கேரட், பீட்ரூட், சவுச்சவ், பரங்கிக்காய் யாவும் பொடியாக நறுக்கி கழுவி வேக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சீரகம் தாளித்து, காய்களை போட்டு கிளறவும். உப்பு சேர்க்கவும். காய்கள் வெந்ததும், அரைத்த பொடியைப் போட்டு உப்பு சேர்த்து இறக்குங்க. தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

குடமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள் : மிளகாய் கால் கிலோ, எண்ணெய் ஒரு ஸ்பூன், கடுகு, உப்பு தேவையான அளவு. தேங்காய் துருவல் அரை கப், கேரட் துருவல் அரை கப்.

செய்முறை : குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து, பிறகு அறிந்து வைத்த மிளகாயுடன், உப்பையும் சேர்த்து மூடி வைக்கவும். இரண்டே நிமிடங்களில் வெந்து விடும்.

பிறகு தேங்காய் துருவலை தூவி இறக்கவும். இரண்டே நிமிடங்களில் செய்து விடலாம். உடலுக்குத் தேவையான சத்துள்ள குடமிளகாயை, கேரட்டுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும். பச்சை, சிவப்பு நிறத்துடன் கலர்ஃபுல்லாக இருக்கும். இந்த பொரியலை செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *