ஆரோக்கியம்சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ஹோட்டல் ஸ்டைலில் வெஜிடபிள் குருமா

ஹோட்டல் ஸ்டைலில் வெஜிடபிள் குருமா இந்த மெட்டில் செய்து பாருங்க. வீட்டில் செய்யக்கூடிய சப்பாத்தி, தோசை, இட்லிக்கு, பரோட்டா போன்ற டிபனுக்கு ஏற்ற வெஜிடபிள் குருமாவை ஹோட்டல் ஸ்டைலில் செய்யலாம் வாங்க.

ஹோட்டல் வெஜிடபிள் குருமா

தேவையான பொருட்கள் : உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு தலா கால் கப்.

பெரிய வெங்காயம் 2 நறுக்கியது. தக்காளி 2 நறுக்கியது. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன். கரம் மசாலா ஒரு ஸ்பூன். மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன். மல்லித் தூள் ஒரு ஸ்பூன். எலுமிச்சை சாறு 2 ஸ்பூன். கொத்தமல்லி அரை ஸ்பூன். உப்பு தேவையான அளவு. எண்ணெய் தேவையான அளவு.

அரைப்பதற்கு : தேங்காய் அரை மூடி துருவியது. முந்திரி 5. கசகசா கால் ஸ்பூன். சோம்பு அரை ஸ்பூன். பொட்டுக்கடலை 2 ஸ்பூன். பச்சை மிளகாய் 2. கிராம்பு 2. பட்டை ஒரு இன்ச். ஏலக்காய் ஒன்று.

தாளிக்க : எண்ணெய் 2 ஸ்பூன். பிரியாணி இலை 2. கறிவேப்பிலை சிறிது.

செய்முறை : காய்களை கழுவி தேவையான வடிவத்தில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் நீர் விட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நறுக்கிய காய்கறிகளை அரை வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். இதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா பொடிகளை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

இதனுடன் தேங்காய்ப் பால் ஒரு கப், தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். வேக வைத்த காய்கறிகளை, தேவையான அளவு உப்பு சேர்த்து குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது இதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் ஹோட்டல் வெஜ் குருமா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *