பாலாவின் வர்மா அக்டோபர் 6 ஓடிடியில் வெளியாகிறது
தனது திறமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய பாலா இயக்கத்தில் தான் மகனையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விக்ரம் நினைக்கவே வர்மா உருவானது. ஆனால் ஸ்டைலிஷான அர்ஜுன் ரெட்டியை, பாலா பட ஹீரோக்கள் ஸ்டைலிலேயே படமாக்கப் பட்டதால் வர்மா வெளியாகாமல் போனது.
வர்மா வெளியாக
இந்நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வர்மா வெளியாக உள்ளதால் வர்மாவா? ஆதித்ய வர்மாவா? எது பெஸ்ட் என்ற போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
பாலாவின் படங்கள் தேசிய விருதுகளை குவித்தவை. விக்ரமை தமிழின் முன்னணி நடிகர் ஆக்கியது 1999ஆம் ஆண்டு பாலா இயக்கிய சேது படம். இந்தப் படம் சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதை வென்றது. இதோடு கடந்த 2003ஆம் ஆண்டு பாலாவின் ‘பிதாமகன்’ விக்ரமுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதைப் பெற்றுத் தந்தன.
ஃபர்ஸ்ட் லுக்
விஜய், தேவார கொண்டா, ஷாலினி, பாண்டே நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கில் மாபெரும் ஹிட்டடித்தது. ‘அர்ஜுன் ரெட்டி’ இப்படத்தின் தமிழ் ரீமேக் வர்மாவை இயக்குனர் பாலா இயக்க, விக்ரம் மகன் துருவ் நடிகராக அறிமுகமானார். தாடியோடு துரு விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தின.
அக்டோபர் 6 ஓடிடியில்
ஆனாலும் படமும் முழுமை அடைந்து ரிலீசுக்காக தயாரான போது பாலா படத்தை எடுத்த விதம், திருப்தி அளிக்கவில்லை என்று கூறி வர்மாவை கைவிட்டது. தயாரிப்பு நிறுவனம் அர்ஜுன் ரெட்டியின் உதவி இயக்குனரை வைத்தே மீண்டும் ஆதித்ய வர்மாவை தயாரித்தது.
மேலும் படிக்க : கமனத்துடன் அழகிய தமிழ் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆனால் கடந்த ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை. இந்நிலையில் பாலா இயக்கிய வர்மா வரும் அக்டோபர் 6 ஓடிடியில் வெளியாகும் என்று தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
மேலும் படிக்க : ஆத்தி..ஒரு நாள் முழுசா குதிரை மேலேயே இருந்த நடிகர்..