சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ரைஸ் வரைட்டிஸ் – 2

தாளித்த சாதத்தில் ஈஸியாக செய்வது இந்த முறைதான், இந்த பதிவில் புளியோதரை, எலுமிச்சை சாதம் இரண்டு வகையில் செய்யலாம். வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

புளியோதரை

தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி அரை கிலோ, 100 கிராம் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன் நிலக்கடலை 2 ஸ்பூன், மிளகாய் வற்றல் 10, நல்லெண்ணெயில் 150 மில்லி, பெருங்காயப் பொடி, மஞ்சள்தூள் தலா அரை ஸ்பூன்.

செய்முறை : கொத்தமல்லி விதை, கடலை பருப்பு, வெந்தயம், மூன்றையும் நன்றாக வறுத்து பொன்னிறமான உடன் எடுத்து ஆற விட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். அரிசியை உதிரியாக வடித்து தட்டில் கொட்டி ஆற விடவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு வெடிக்க விட்டு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, புளிக் கரைசலை ஊற்றவும். உப்பு மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் போட்டு கலக்கி கொதிக்கும் போது, பொடியை, புளி கரைசலில் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கி வடித்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, குழம்பை ஊற்றி நன்றாக கிளறி வைக்க வேண்டும். சுவையான புளியோதரை தயார்.

எலுமிச்சை சாதம் – 1

தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி 400 கிராம் எலுமிச்சம்பழம் இரண்டு நல்லெண்ணெய் 100

செய்முறை : அரிசியை நல்ல பதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற விட வேண்டும். எலுமிச்சை பழத்தை சாறெடுத்து சேர்த்து சாதத்தில் கொட்டிக் கிளறவும். பிறகு நல்லெண்ணெய்யை காய வைத்து கடுகு, மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளித்து, இறுதியில் பச்சை மிளகாயை வதக்கி, சாதத்தில் கலந்து நன்றாகக் கிளற வேண்டும். சுவையான எலுமிச்சை பழ சாதம் தயார்.

எலுமிச்சை பழ சாதம் – 2

தேவையான பொருட்கள் : எலுமிச்சம்பழம் பெரியது பழுத்தது 4, தேங்காய் அரை மூடி, நல்லெண்ணெய் 100ml, புழுங்கலரிசி 1/2 கிலோ.

செய்முறை : எலுமிச்சம் பழத்திலிருந்து லேசாக சாறு பிழிந்து தனியே வைத்து எடுத்து வைக்கவும். மீதி பழத்தை தண்ணீர் கலந்து கொண்டதுடன் தேங்காயை அரைத்து கலந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு ,உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், ஆகியவற்றை போட்டு வேக விட வேண்டும். கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயப் பொடியை, எலுமிச்சை பழ சாற்றையும் கலக்க வேண்டும்.

அது கொதித்து வரும் போது அந்த சாற்றில், மஞ்சள் தூள், உப்பு, போட்டு கலக்கி வைத்து ஊற்றி மல்லித்தழை போட்டு உடனே இறக்கி விடவும். பின் ஆற வைத்து குழம்பு ஊற்றி கிளறவும். இதை ஒரே நாளுக்குத் தான் சாப்பிடலாம். மறு நாள் வைத்திருக்க முடியாது. தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *