சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ரைஸ் வரைட்டிஸ் – 1

தாளித்த சாதத்தில் ஈஸியாக செய்வது இந்த முறைதான், இந்த பதிவில் தக்காளி சாதம், நெய்சாதம்,  ஃபிரைட் ரைஸ் சாதம் என்ன வகையில் செய்யலாம். வாங்க எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி அரை கிலோ, தக்காளி அரை கிலோ, வெங்காயம் அரை கப் நறுக்கியது, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட் ,பச்சை மிளகாய் தேவைக்கு ஏற்ப.

செய்முறை : வாணலியில் பட்டை, கிராம்பு வெடிக்க விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு சேர்த்து, வதக்க வேண்டும். தக்காளி சிவக்க வதக்கவும். பின்பு அரிசியை ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து வேக வைத்து இறக்கவும். மல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான தக்காளி சாதம் தயார்.

நெய் சாதம்

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி அரை கிலோ, நெய் 100 கிராம், தக்காளி 2, பட்டை, கிராம்பு, சோம்பு சிறிதளவு. தேங்காய் அரைமூடி துருவியது. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு,முந்திரி தேவைக்கு ஏற்ப.

செய்முறை : குக்கரில் நெய் ஊற்றி, பட்டை, கிராம்பு அரிந்த வெங்காயம், புதினா, தக்காளி போட்டு வதக்கி கொள்ளவும். பிறகு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும். அரிசியை நன்றாக கழுவி வடிகட்டி அரிசியை போட்டு நன்றாக சூடு பிடிக்க கிளறவும். சுடு தண்ணீரை ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் ஊற்றி விடவும். தேங்காய் பால் இருந்தால், தண்ணீரோடு சேர்த்து கலக்கி மூடி விடவும். 2 ரவுண்ட் விசில் வந்ததும், சிறிது நெய் ஊற்றி, முந்திரி சேர்த்து கிண்டி, இளம் தீயில் வைத்து இறக்கி விடுங்கள். சுவையான நெய் சாதம் தயார்.

ஃபிரைட் ரைஸ்

தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி அரைக் கிலோ, வெங்காயத் தாள் 10, கேரட்,பீன்ஸ், குடை மிளகாய் 100 கிராம், அஜினோமோட்டோ ஒரு சிட்டிகை, சோயா சாஸ் ஒரு ஸ்பூன், பூண்டு 8 பல், பெரிய வெங்காயம் 3, ரீஃபைன்ட் ஆயில் 100ml, உப்பு, பச்சை மிளகாய் தேவைக்கு ஏற்ப.

செய்முறை : பாஸ்மதி அரிசியை உதிரி உதிரியாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டை தோலுடன் தட்டிப் போடவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகளை போட்டு வதக்கவும். அஜினமோட்டோ சேர்த்து காய் வேகும் வரை வதக்கி, எல்லாம் நன்றாக வெந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கவும். பிறகு, அதில் சோயா சாஸ் ஊற்றி நன்றாக கலந்து, அதில் ஆறிய சாதத்தை கொட்டி சேர்த்து கிளறினால், முந்திரிப் பருப்பை நெய் விட்டு வறுத்து மேலே தூவவும்.

பின் குறிப்பு : பச்சை மிளகாயை குறைத்துக்கொண்டு மிளகு பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து கிளறவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *