தேங்காய் பால் வரகு அரிசி வெண்பொங்கல்
அரிசிகளில் பச்சரிசி உடலுக்கு நல்லது. பொங்கல் பச்சரிசியில் வைக்க வேண்டும். சிறுதானியங்களில் வரகு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானிய அரிசி வகைகள் உள்ளன. தனியாக சாப்பிட பிடிக்காதவர்கள் பொங்கல் செய்து சாப்பிடலாம்.
வரகு அரிசி பொங்கல்
தேவையானப் பொருட்கள்
வரகு அரிசி கால் கிலோ, தேங்காய் பால் ஒரு டம்ளர், பாசிப்பருப்பு 100 கிராம், இஞ்சித் துண்டு சிறிது, சீரகம் ஒரு ஸ்பூன், மிளகு 10, பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, நெய் 3 ஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை விளக்கம்
பாசிப்பருப்பை வறுத்து இதனுடன் வரகு அரிசியையும் சேர்த்து கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டரை டம்ளர் வீதம் தண்ணீர் அளந்து விடவும். இந்த அளவில் ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 4 விசில் வந்ததும் இறக்கி விடவும். ஒரு வாணலியில் நெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயத்தூள் தாளித்து பொங்கல் வெந்ததும் அதில் கலந்து விடவும். கமகம வாசனையுடன் தேங்காய் பால் வரகரிசி வெண்பொங்கல் தயார். தேங்காய் சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும்